கொடியேற்றத்துடன் தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, தில்லையம்பலத்தான் நடராஜர் ஆலயத்தில் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனமும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் ஆண்டுதோறும் வெகுச்  சிறப்பாக  நடைபெறும். இதில், பத்து நாள்கள் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா  நேற்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கோயில் கொடிமரத்தில் மேளதாளம் முழங்க, வேதமந்திரங்கள் ஒலிக்க  கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Sponsored


ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா  நடக்கும். அன்று, நடராஜருக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நடராஜர் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். 

Sponsored


Sponsored


 முக்கியத் திருவிழாவான தேர்த் திருவிழா வரும் ஜனவரி 1-ம் தேதியும், ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 2-ம் தேதியும் நடக்கவிருக்கிறது. அந்த நன்னாளில் அனைவரும் கலந்துகொண்டு ஈசனின் அருளைப் பெறுவோம்.Trending Articles

Sponsored