வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு!Sponsoredவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி கடந்த 18-ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் என்னும் 'பரமபத வாசல்' இன்று திறக்கப்பட்டது. 

Sponsored


Sponsored


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார். அப்போது 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பெருமாளை எளிதாகத் தரிசிப்பதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.Trending Articles

Sponsored