அண்ணாமலையாருக்கும் அம்பிகைக்கும் சண்டையா? ‘திருவூடல் வைபவம்’ நடத்தப்படும் அடிப்படை என்ன? #VikatanPhotoStorySponsoredபிருங்கி முனிவர் தீவிரமான சிவபக்தர். சிவனை மட்டுமே வணங்குவார். அம்பிகையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தவக்கோலத்தில் இருக்கும் பிருங்கி முனிவருக்குக் காட்சி தரச் செல்லும் சிவபெருமான், அம்பிகையை உடன் வருமாறு அழைக்கிறார். அம்பிகை மறுக்கிறாள். சிவபெருமான் மட்டும் கிரிவலப் பாதையில் சென்று பிருங்கி முனிவருக்குக் காட்சி தந்துவிட்டு வருகிறார். அதனால் இறைவனிடம் ஊடல் கொள்கிறாள் அம்பிகை. ஒருவழியாக சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானம் செய்துவைக்கிறார். தொடர்ந்து மறுவூடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் திருவூடல் காட்சி மற்றும் மறுநாள் அதிகாலையில் நடைபெறும் மறுவூடல் காட்சி தொடர்பான படங்கள் இங்கே நீங்கள் தரிசிப்பதற்காக... 

ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய திருஅண்ணாமலையாருக்கு தீபாராதனை...

Sponsored


Sponsored


அக்னித் தலமான திருவண்ணாமலையில், பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா...
               

'அண்ணாமலையாருக்கு அரோகரா' பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கிடையில் பஞ்சமூர்த்திகளின் பரவச தரிசனம்...

 கோயிலில் இருக்கும் சிறிய நந்திதேவருக்கு சிறப்பான அலங்காரம்... மாட்டுப் பொங்கல் வைபவம்...

                              
 

காலைப் பொழுதில் கதிரொளி பரப்பித் தோன்றும் ஆதவனுக்குக் காட்சி தரும் அருணாசலப் பெருமான்...

கிரிவலப் பாதையில் பிருங்கி முனிவருக்குக் காட்சி தரப் புறப்படும் இறைவன்...

  இறைவியின் ஊடல் கண்டு திரும்பிச் செல்லும் இறைவனின் திருக்காட்சி...

ஒருவழியாக இறைவியின் ஊடல் தணிந்தது கண்டு, இறைவன் திருக்கோயிலுக்குள் பிரவேசிக்கும் திருக்காட்சி...

இறைவியின் திருவூடல் நீங்கி மறுவூடல் காணும் மகத்தான திருக்காட்சி


ஊடல் தணிந்த மகிழ்ச்சியில் இறைவியுடன் எழுந்தருளி பக்தர்களை மகிழ்விக்கும் அற்புதக் காட்சி...

இறைவனிடம் ஊடல் கொண்ட இறைவியிடம் தூது சென்று சமாதானம் செய்த சுந்தரமூர்த்தி நாயனார்...Trending Articles

Sponsored