நெல்லையில் 47 வருடங்களுக்குப் பின் பஞ்ச கருட சேவை - பக்தர்கள் பரவசம்!Sponsoredநெல்லையில் 47 வருடங்களுக்குப் பின்னர் 5 கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் காட்சியளித்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லையில் கடந்த 1971-ல் பஞ்ச கருட சேவை நடைபெற்றது. 47 வருடங்களுக்குப் பின்னர் இந்த ஆண்டு பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நடந்தேறியது. நெல்லை டவுன் ஸ்ரீவாரி டிரஸ்ட், நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நகர பக்தர்கள் பேரவை சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக அறநிலையத் துறையின் சார்பாக சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Sponsored


இந்த நிகழ்ச்சிக்காக தென்திருப்பதி மற்றும் சங்காணியில் இருந்து ஸ்ரீவேங்கடஜலபதி பெருமாள்கள், நெல்லை டவுன் பகுதியில் இருந்து கரியமாணிக்க பெருமாள், ஸ்ரீலெட்சுமிநரசிம்ம பெருமாள், மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய 5 பெருமாள் கோயில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் சந்திப் பிள்ளையார் கோயில் முன்பிருந்து புறப்பட்டு, நெல்லையப்பர் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

Sponsored


இந்த சிறப்பு நிகழ்ச்சியில், கீழ ரத வீதியில் உற்சவர்கள் வரும்போது பெரிய தேரின் முன்பாக தீப ஆராதனை காட்டப்பட்டது. ரத வீதிகளில் கோலாட்டம், பிரபந்தம் நடைபெற்றது. தை திருவோணம், மார்கழி குளிரின் நிலவொளியில் நெல்லையப்பர் மற்றும் நெல்லை கோவிந்தன் முன்பாக நாதஸ்வரத்தில், ’திருமால் பெருமைக்கு நிகர் ஏது?’ என பாட்டு இசைக்க நெல்லையின் முக்கிய பெருமாள் கோயில்களின் உற்சவர்கள் காட்சியளித்ததை திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.Trending Articles

Sponsored