பட்டினத்தார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை!Sponsoredமயிலாடுதுறை, பூம்புகாரில் அமைந்துள்ளது பல்லவனேஸ்வரர் திருக்கோயில். இங்கு தை மாதக் கடைசி செவ்வாயை முன்னிட்டு நேற்று இரவு விளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் பட்டினத்தாருக்கு தனி சந்நிதி உள்ளது. அதனால் இக்கோயில் பட்டினத்தார் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு மூலவராக பல்லவனேஸ்வரர் வீற்றிருக்கிறார். அம்மன் சௌந்திரநாயகி என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.

கோயிலில் உள்ள அம்மன் சந்நிதியின் எதிரே இந்தத் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. முதலில் பெண்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றினர். பின்பு  மஞ்சள் பொடியால் விநாயகர் செய்து அதற்கு பூஜை செய்தனர். அர்ச்சகர் சிறப்பு மந்திரங்கள் சொல்லச் சொல்ல அதைப் பூஜை செய்யும் பெண்களும் கூறி தங்களின் விளக்குகளுக்கும் மஞ்சளாலான விநாயகருக்கும் குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். அப்போது அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

Sponsored


Sponsored


மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அங்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களிடம் இது குறித்து கேட்ட போது, "ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலில் தை மாத இறுதி செவ்வாயை முன்னிட்டு விளக்கு பூஜை செய்வது வழக்கம். இன்று தை மாத இறுதி செவ்வாய் என்பதால் விளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.குடும்பத்தின் நன்மைக்காகவும் அனைவரும் எல்லா வளங்களைப் பெற வேண்டியும் இந்தத் திருவிளக்கு வழிபாடு செய்யப்பட்டது" என்று கூறினார்கள்.

பெண்கள் செய்த விளக்கு பூஜை முடிந்த பிறகு மூலவரான பல்லவனேஸ்வரருக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. அதே சமயத்தில் இன்று சஷ்டி என்பதால் இங்கு தனி சந்நிதியில் வீற்றிருக்கும் முருகனுக்கு சந்தனத்தால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விளக்கு பூஜை வழிபாட்டில் பல்லவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.Trending Articles

Sponsored