கும்பகோணத்தில் மாசி மக விழா!- புனித நீராடி, திதி கொடுத்த பக்தர்கள்Sponsoredமாசி மகத் திருவிழாவைமுன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக வந்த பொதுமக்களை காவல்துறையினர் விரட்டியடித்த சம்பவமும் நடைபெற்றது.

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திர தினத்தில் கும்பகோணத்தில் மாசி மக விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடபட்டு வருகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மகம் என்றும் கொண்டாடப்படுகிறது. இது தென்னகத்துக் கும்பமேளா என்றும் சொல்லப்படுகிறது.

 மாசி மக விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மகா மகம் குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கடந்த 20 ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபி முகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் உள்ளிட்ட ஆறு சிவன் கோவில்களிலும் பத்து நாள் உற்சவம் நடைபெற்றதோடு ஐந்தாம் நாள் ஓலை சப்பரமும், எட்டு மற்றும் ஒன்பதாம் நாள்களில் தேரோட்டமும் நடைபெற்றது.

Sponsored


Sponsoredஇதன் முக்கிய நிகழ்வாக கெளதமேஸ்வரர், பாண புரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்களிலிருந்து சுவாமிகள் அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடனும் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு மகாமகம் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்தக் கோவில்களின் அஸ்திர தேவருக்கு 21 வகையான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டதோடு அஸ்திர தேவர்கள் மகாமகம் குளத்தில் நீராடினர். அதனை தொடர்ந்து குளக்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
 மாசி மகத்தின் போது மகாமகம் குளத்தின் கரையில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு கரையில் மட்டுமே திதி கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற கரைகளில் திதி கொடுக்க வந்தவர்களை போலீஸார் விரட்டியடித்த சம்பவமும் நடைபெற்றது. மேலும், குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது குளத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காமல் காவல் துறையினர் கேட்டை பூட்டி விட்டனர். இதனால் பக்தர்கள் கேட்டிற்கு வெளியே நின்றவாறே சுவாமியையும், தீர்த்தவாரியையும் பார்வையிட்டனர்.Trending Articles

Sponsored