கங்கைகொண்ட சோழபுரத்தில் மாசிமகம்..! தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள்கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரியில்  கலந்து கொண்டதால் ஜெயங்கொண்டம் பகுதியே விழா கோலம் பூண்டது.

                                 


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  மாமன்னன் ராஜேந்திரசோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக கி.பி.1036-ல் இக்கோவிலைக் கட்டினார். கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் யுனேஸ்கோவால் "உலக மரபு சின்ன"மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


                               

Sponsored


வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலுக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கொடிமரம் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. 85 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2017 பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேமும் நடைபெற்றது. கொடியேற்றப்பட்ட கடந்த 20-ம் தேதி முதல் தினமும் சுவாமி, அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த நாட்களில் தினமும் மாலையில்  சுவாமி - அம்பாள்  திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. 

Sponsored


                            

இந்த மாசிமக பிரமோற்சவ விழாவின் 8-வது நாள் விழாவில், தேரோட்டமும் மற்றும் 9-ம் நாள் விழாவில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது.  10-ம் நாள் விழாவான இன்று (மார்ச் 1) மாசிமக தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான சுவாமி - அம்பாள் கோவில் குளத்திற்கு எழுந்தருளிய பின், குளத்தில் தீர்வாரி வைபவம் நடைபெற்றது. பின், பக்தர்கள் முழுக்கு நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். கிரிவலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நாளை 11-ம் நாள் மற்றும் நாளை மறுநாள் 12-ம் நாள் திருவிழாவுடன் மாசி மக பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது. திருக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி மாதம் சிவன், விஷ்ணு மற்றும் முருகன் ஆகிய சுவாமிகளுக்கு உகந்த மாதம் என்பதாலும், மாசி மகத்தில் விரதமிருந்து ஸ்நானம் செய்து வழிபடுவதால் இத்தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பதாலும் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பதாலும் மாசி தீர்த்தவாரியில் பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.Trending Articles

Sponsored