சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்!Sponsoredகாஞ்சிபுரம் சங்கரமடத்தின் 70 வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. மேலும், ஜெயேந்திரர் மரணம் குறித்து சங்கர மட நிர்வாகிகள் இந்து அறநிலையத்துறைக்குக் கடிதம் எழுதினர். மடாதிபதி இறந்து 48 மணி நேரத்துக்குள் அடுத்த மடாதிபதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது மரபு. எனவே, புதிய மடாதிபதியாக விஜயேந்திரர் அறிவிக்கப்பட்டுள்ளார். 49 வயதாகும் விஜயேந்திரர், தன் 14 வது வயதில் சங்கரமடத்துக்கு வந்தார். சங்கர மடத்தின் 70 வது மடாதிபதியாக விஜயேந்திரர் செயல்படுவார். இதற்கு முன்புவரை அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக இருந்துவந்தார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored