திருவாரூர் தியாகேசர் கோயில் கொடியேற்றம்!Sponsoredபஞ்ச பூதத் தலங்களில் பூமிக்குரிய தலமும், சப்த விடங்கர் தலங்களில் முதன்மையான தலமுமாகிய திருவாரூர் தியாகேசர் கோயில்  பங்குனி உத்திரப் பெருவிழா தொடங்கியது. நேற்று (04.03.2018) முதல்நிகழ்ச்சியாக, கோயில் கொடியேற்றம் நடைபெற்றது. 


வருடத்தில் இரண்டு முறை மட்டுமே எம்பெருமான் தியாகேசரது திருப்பாதம்  இந்த உலக மக்களுக்கு காட்சியளிக்கும். அதில் ஒரு முறை, ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று நிகழும். பங்குனி 17-ம் தேதி (31.03.2018) அன்று, பங்குனி உத்திர நட்சத்திரம். தியாகேசர் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நிகழ உள்ளது.    

Sponsored


Sponsored"திகழ்ந்த பங்குனி யுத்திர நாளினில் தேவதீர்த் தப்பொய்கை

மகிழ்ந்து மூழ்கியே யடயா டகம்பசு மாநிலம் முதற்றானம்

புகழ்ந்து நான்முறை வஞ்சமின் றுதவியே புற்றிடங் கொண்டோனை

அகங்கொ ளன்பொடு போற்றியோர் முத்தியாங் கடைதல் சத்தியமம்மா"

- என பங்குனி உத்திரப் பெருமை, திருவாரூர் தலபுராணத்தில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் வாயிலாகத் தெரியவருகிறது. 
இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவாரூர் ஆழித்தேரோட்டம், வரும் மே 20-ம் நாள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் வாசிகள், பிற மாவட்டத்தைச் சேர்ந்த மெய்யன்பர்கள், ஆழித்தேர்த் திருவிழாவைக் காண ஆவலோடு தயாராகிவருகின்றனர்.Trending Articles

Sponsored