செட்டிக்குளம் முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருந்திருவிழா!



Sponsored



பிரசித்திப் பெற்ற செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (21.03.08)  மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

Sponsored


Sponsored


இன்று (22.03.18) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 10.30 மணியளவில் கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த நாள்களில் நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகளும், இரவு 9 மணிக்கு அலங்கரிக்கபட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 7 ம் நாளான வரும் மார்ச் 28ம் தேதி முருகன், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாணமும், 8ம் நாள் திருவிழாவான 29ம் தேதி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து அலங்கரிக்கபட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தளி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 30 ம் தேதி மாலை 5 மணியளவில் தொடங்கி 31ம் தேதி மாலை திருத்தேர் வந்தடைகிறது. பெரும்பாலான கோயில்கள் தேரோட்டம் காலையில் மட்டுமே நடைபெறும். ஆனால், இங்கு முதல் நாள் மாலையில் தொடங்கி அடுத்தநாள் காலை வரை நடைபெறுவது சிறப்பு. தேரோட்டத்தை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.



Trending Articles

Sponsored