ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதார தினம் இன்றுஎந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய பெண்தான் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்று வணங்கப்படுகிறார். ஆந்திர மக்களில் வைஸ்ய குல பிரிவினரின் குலதெய்வமாகவே போற்றப்படும் ஸ்ரீவாசவி அன்னையின் அவதார தினம் இன்று. 

Sponsored


அன்னை சக்தி தேவி சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை உருவானது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பேனுகொண்டா நகரத்தில் விருபாட்சன் - வாஸம்பா தம்பதிகளுக்கு சித்திரை மாத வளர்பிறை தசமியில்  தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி.

Sponsored


குசுமாம்பிகா என்பது அன்னையின் இயற்பெயர். அழகிய மங்கையாக வளர்ந்த அன்னையைக் கண்டு ஆசைப்பட்டான் விஷ்ணுவர்த்தனர் என்ற அண்டை நாட்டு அரசன். தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும் மிரட்டினான். ஊரே கூடி அன்னை வாசவி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற நிலையில் ஊரையும், தனது இனத்தையும் காக்க ஸ்ரீவாசவி தீயில் பாய்ந்து உயிரைவிட்டார். அவரோடு 102 பேர்களும் சேர்ந்து மாய்ந்தனர். பல நூறு பேர்களின் உயிரைக் காக்க தன்னையே தியாகம் செய்த தேவி அந்த மக்களின் குலதெய்வமானார். தென்னாடெங்கும் கன்னிகா பரமேஸ்வரியாக வணங்கப்படுகிறார். பெண்களின் விருப்பத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரி அவதரித்த இந்த நாளில் பெண்கள் வழிபட்டு மாங்கல்ய பலம் பெறுவார்கள். தியாகத்தின் அடையாளமான கன்னிகா பரமேஸ்வரியை இந்த நாளில் வணங்கி அருள்பெறுவோம். 

Sponsored
Trending Articles

Sponsored