ஒரே ஒரு பக்தனைக் காக்க ஸ்ரீநரசிம்மர் வடிவமெடுத்த திருநாள் இன்று!திருமாலின் 9 அவதாரங்களில் (கல்கி அவதாரம் இனிதான் என்பதால்) அழகிய வடிவம் கொண்டவர் யாரென்றால் ஸ்ரீநரசிம்மர் தான் என்று வைணவப் பெரியோர்கள் கூறுவார்கள். அழகிய கிருஷ்ணர், அழகிய ராமர் என்று போற்றப்படுவதில்லை. ஆனால் அழகிய சிங்கர் என்று நரசிம்மரை வணங்குகிறோம். சிம்ம முகத்துடன் இருந்தாலும் அழகிய சிறப்பால் அனைவரையும் கவரும் பெருமான் இவர். ஹிரண்யனின் இம்சையால் அவதிப்பட்ட பிரஹலாதனுக்காக ஸ்ரீமன் நாராயணன், சிம்ம முகமும் மனித உடலும்கொண்டு தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நாளே ஸ்ரீநரசிம்ம அவதார தினமாக போற்றப்படுகிறது.

Sponsored


இது, சித்திரை வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று, ஸ்ரீநரசிம்ம ஜயந்தி தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிக்கு ஸ்ரீநரசிம்மரை பூஜித்து வணங்கினால், எல்லா காரியத் தடைகளும் விலகும் என்பது நம்பிக்கை. திருமாலின் எல்லா அவதாரங்களும் பூவுலக மக்களைக் காக்க எடுக்கப்பட்டது. ஸ்ரீநரசிம்ம அவதாரமோ, ஒரே ஒரு பக்தனைக் காக்க (பிரஹலாதன்) நேரடியாக  எடுக்கப்பட்டது. ஆபத்தில் உடனே வந்து காக்கும் நரசிம்மரை இந்த நாளில் வணங்கி செவ்வரளி, தாமரை போன்ற மலர்களால் அர்ச்சித்து, வெல்லம், அவல், சர்க்கரைப் பொங்கல், பழங்கள், பானகம் போன்றவற்றை நைவேத்யமாகப் படைத்து பலன் பெறலாம். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored