''ஆண்டவரின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவே இங்கே வந்தேன்’’ - மாற்கு #NewTestamentSponsoredயேசு கிறிஸ்துவின்  பன்னிரு சீடர்களில், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரின் நிரூபணங்களே புதிய ஏற்பாடாக கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கூறுகின்றன. இதிலிருந்தே மாற்கு ஒரு மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்புப் பணியாளர் என்பதையும் அறியலாம். முதலில் அவர் பவுலுடன் சேர்ந்து நற்செய்தி அறிவித்தார். அதன் பிறகு தூய பேதுருவுடன் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தார். இறுதியாக இவர் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும்  இறைப்பணிக்காக ஒப்புக்கொடுத்தார்.

 

ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதற்காகத் தன்னுடைய இன்னுயிரையும் கொடுத்தார்.  மாற்கு, அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டிருந்த நேரம். அந்த நகரத்துக்குள் அவர் நுழைந்தபோது அவரது காலணிகளில் ஒன்று அறுந்துபோய்விட்டது. எனவே, அவர் அருகே இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று தன்னுடைய காலணியைத் தைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். 

Sponsored


செருப்பு தைக்கும் தொழிலாளி, மாற்கின் காலணியைத் தைக்கும்போது தவறுதலாக அவர் பயன்படுத்திய ஊசி அவருடைய இடது கையில் குத்திவிட்டது. இதனால், ரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தது. அப்போது அவர் ‘கடவுள் ஒருவரே’ என்று சத்தமாகக் கத்தினார். உடனே மாற்கு, அருகே கிடந்த மணலைக் குழப்பி சேறு உண்டாக்கி, அதனை எடுத்து அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியின் காயம்பட்ட கையில் வைத்தார். அவருடைய கையிலிருந்து வழிந்த ரத்தம் முற்றிலுமாக நின்றுபோனது. அவருக்கு இருந்த வலியும் காணாமல் போனது. 

Sponsored


இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போன அந்த மனிதர் மாற்கிடம்,  'நீர் யார்?' என்று கேட்டார். அதற்கு மாற்கு, 'நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியர். அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகவே இங்கே வந்தேன்' என்று எடுத்துரைத்தார்.மாற்கின் வார்த்தைகளால் மனம் மாறிய  அந்தத் தொழிலாளி, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார். அந்தத் தொழிலாளியின் பெயர் அணியானுஸ். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். 

இதற்கிடையே இந்தச் செய்தி எப்படியோ நகர மக்களின் காதுகளை எட்ட, அவர்கள் மாற்கைக் கொல்லத் தீர்மானித்தார்கள். இதனால் மாற்கு அணியானுஸை அலெக்ஸாண்ட்ரியா நகரின் ஆயராக  நியமித்துவிட்டு, வேறொரு நகருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.
ஆண்டவர் இயேசு கூறியதாக ''உலகெங்கும் சென்று, எல்லோருக்கும் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்''  மாற்கு இப்படிக் கூறுகிறார்.  ஆகவே, ஆண்டவர் இயேசு சொன்ன கட்டளையை, மாற்கு நற்செய்தியாளர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ முயல்வோம்.

கடல் கடந்து சென்றுதான் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் இருக்கும் இடத்தில், நம்மால் முடிந்த அளவு நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கலாம். அதற்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வு ஒரு சான்று.Trending Articles

Sponsored