வைகாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை



வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

துலாம்:
துலாம்ராசி அன்பர்களே!

Sponsored


சனி மாதம் முழுவதும், ஜூன் 10 வரை சுக்கிரனும், மே இரண்டாவது வாரத்திலிருந்து ஜூன் 6 வரை புதனும் நன்மை செய்வார்கள். வருமானம் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படுவதுடன், செலவுகளும் ஏற்படும். பணவரவுக்குக் குறைவிருக்காது. மாத மத்தியில் கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்னை மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வசதியான புதிய வீட்டுக்கு குடிபோகும் வாய்ப்பு உண்டாகும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

Sponsored


அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

Sponsored


தொழில், வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் தாமதமாக முடியும். சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக  கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். 

மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையப் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 20, 21, 22, 23, ஜூன் 1, 2, 7, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

சந்திராஷ்டம நாள்கள்: மே 16, 17, ஜூன் 12, 13

பரிகாரம்: வெள்ளியன்று லட்சுமி தாயாருக்கு நெய்தீபம், சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை, தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் செவ்வாயும் கேதுவும் மே 21 வரை புதனும் நன்மை செய்வார்கள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூடி வரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, பிரசித்திப் பெற்ற வெளிமாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.

பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான மாதம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் இருந்த தொல்லைகள் நீங்கி, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம்.  சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 16, 22, 25, 30, ஜூன் 3, 4, 10, 11, 13

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

சந்திராஷ்டம நாள்கள்: மே 18, 19, ஜூன் 14

பரிகாரம்: தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு, ஞாயிறு ராகு காலத்தில் காளிக்கு நெய் தீபம், சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

தனுசு:
தனுசுராசி அன்பர்களே!

குரு, சூரியன் மாதம் முழுவதும், ஜூன் 10-க்குப் பிறகு சுக்கிரனும் நன்மை தருவார்கள்.  எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  திருமண முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  பணவரவு நன்றாக இருக்கும். புதிய  வாகனம் வாங்கலாம்.  நண்பர்கள்  உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.  உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்கு தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். 

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். 

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமை கிடைக்கும்.

பெண்களுக்கு  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 18, 19, 25, 27, ஜூன் 1, 2, 5, 6, 13

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சந்திராஷ்டம நாள்கள்: மே 20, 21

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ரோகிணியன்று கிருஷ்ணருக்கு நெய்தீபம்

மகரம்:
மகரராசி அன்பர்களே! 

பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கவேண்டிய மாதம். ஆனால், புதனாலும் சுக்கிரனாலும் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பொன் பொருள் சேரும். உறவினர்களுடன் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். அவர்களிடமிருந்து  ஒதுங்கி இருப்பது அவசியம். சிலருக்கு தடைபட்ட திருமணம் கூடிவரும். சகோதர வகையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும். பிள்ளைகளால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாத முடிவில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். 

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி ஏற்படும். 

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 16, 18, 21, 27, ஜூன் 3, 4, 7, 9, 14

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

சந்திராஷ்டம நாள்கள்: மே 22, 23

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை, தேய்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு

கும்பம்:
கும்பராசி அன்பர்களே!  

குரு, ராகு, சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை செய்வார்கள். ஜூன் 10 வரை சுக்கிரன், மே முதல் புதன் ஆகியோரும் நற்பலன்களைத் தருவார்கள். மாதம் செயலில் வெற்றி, பொருளாதாரச் செழிப்பு,   மகிழ்ச்சி ஆகிய அனுகூலப் பலன்களைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுக மாகக் காணப்படும்.  குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  பெண்க ளால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.  பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

பணியாளர்கள் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவிஉயர்வு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும். திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். 

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தின் சார்பில் விருதுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்கள்  சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 20, 22, 23, 30, 31, ஜூன் 1, 2, 5, 6, 11

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

சந்திராஷ்டம நாள்கள்: மே 24, 25

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அபிஷேகம், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்:
மீனராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரனாலும் புதனாலும்கூட ஓரளவு நன்மைகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவப்பெயர் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். 
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும்.  ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம்.  கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். 

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம். 

மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது  சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 22, 23, 24, 25, 31, ஜூன் 3, 4, 7, 9, 13

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சந்திராஷ்டம நாள்கள்: மே 26, 27, 28

பரிகாரம்: வெள்ளியன்று மாலையில் லட்சுமி வழிபாடு, வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்



Trending Articles

Sponsored