காஞ்சி மாமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் 125-ம் ஆண்டு திருஅவதார விழாSponsoredஏனாத்தூரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் இந்திய கலாசாரத்துறை சார்பில், காஞ்சி மாமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 125-ம் ஆண்டு திருஅவதார விழா, நேற்று மாலை கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் தென்னம்பாக்கம் ஸ்ரீமகா வித்யா பீடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில், 'ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி புரஸ்கரா' விருது நாட்டிய மாமேதை பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது. 'இந்த விருதை ஏற்றுக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக' அவர் தெரிவித்தார்.

சங்கரா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஸ்ரீனிவாசு வரவேற்புரை நிகழ்த்தினார். துணைவேந்தர் வி.எஸ்.விஷ்ணு போட்டி தலைமையுரை நிகழ்த்தினார். அப்போது, காஞ்சி மகானின் அருமை பெருமைகள் நினைவு கூறப்பட்டன. அவரின் நினைவாக மேற்கொள்ளப்படும் புனிதப் பணிகள்குறித்து விளக்கப்பட்டது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீவிஜயேந்திரசேகரேந்திர சரஸ்வதி கலந்துகொண்டு ஆசி வழங்கினார். விழாவின் இறுதியாக, பேராசிரியர் டாக்டர் ஜி.சங்கர நாராயணன் நன்றியுரை வாசித்தார்.   

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored