கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology



ருபத்தேழு நட்சத்திரங்களை மூன்று மூன்று தொகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கிரகத்தை அதிபதியாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டிருக்கிறது. அந்த வகையில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியாக சூரியன் இருக்கிறார். கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம் மேஷ ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைந்திருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதிக்கு மரியாதை தருபவர்களாக இருப்பீர்கள். கல்வியில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். இயல்பாகவே உயர்ந்த குணங்களுடன் திகழ்வீர்கள். மற்றவர்களைக் கவரும் தோற்றம் பெற்றிருப்பீர்கள். உறக்கம் குறைவாகவே இருக்குமென்பதால், அதிக நேரம் உழைப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

Sponsored


எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள். சிந்தனை ரேகைகள் இழையோடும் பரந்த நெற்றியும், சிரித்த முகமும் பெற்றிருப்பீர்கள். எதையும் மறைத்துப் பேச மாட்டீர்கள். உள்ளதை உள்ளபடியே பேசுவீர்கள். அதன் காரணமாகவே பலரின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். விவாதங்களில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களில் பலர் ஆசிரியப் பணியிலும், வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடுவதில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மேஷராசியில் பிறந்தவர்களில் சிலர் மருத்துவத்துறையிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தேசத்தின் மீது பற்று அதிகமிருக்கும். தெய்வ பக்தியும் அதிகமிருக்கும். நீங்கள் ரிஷபராசியில் பிறந்திருந்தால் நல்ல தலைவர்களாகத் திகழ்வீர்கள். சுதந்திர மனப்பான்மை அதிகமிருக்கும். மற்றவர்கள் உங்களை அதிகாரத்தின் மூலம் பணியவைக்க முடியாது. காதலைவிட கடமைக்கே முக்கியத்துவம் தருவீர்கள். எதிலும் கறாராக இருப்பீர்கள். மனைவி, பிள்ளைகளிடம்கூட கண்டிப்பாக நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளை உயர்ந்த லட்சியத்துடன் வளர்ப்பீர்கள். ஆடம்பரத்தை விரும்ப மாட்டீர்கள். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு வாழ்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். 30 வயதுக்கு மேல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

Sponsored


இனி பாதவாரியாகப் பலன்களைப் பார்ப்போம்.

Sponsored


கார்த்திகை 1-ம் பாதம்: 

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - குரு 

தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் மிகுந்த  முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சிந்தனையிலும் செயலிலும் வேகமாக இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் நினைத்த உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். எதையும் ஒத்திப்போடுவதை விரும்ப மாட்டீர்கள். கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று விளங்குவீர்கள். பெரிய பெரிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். ஆனாலும், அதனால் தற்பெருமைகொள்ள மாட்டீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைப்பீர்கள். மனைவி, மக்களுக்காக எதையும் விட்டுக்கொடுப்பீர்கள். எப்போதும் வீட்டில் உறவினர்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இளம் வயதிலேயே சாதனை படைப்பீர்கள்.


கார்த்திகை 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சனி

எல்லோரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பீர்கள். மற்றவர்களால் சிறு சிறு ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் செய்த உதவியை மறக்கவே மாட்டீர்கள். அவர்கள் செய்த உதவிக்கு எப்போது பிரதியுபகாரம் செய்யலாம் என்று காத்துக்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினருக்கு அடிக்கடி விலையுயர்ந்த பொருள்களைப் பரிசாகத் தந்து மகிழ்விப்பீர்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்வீர்கள். சென்ட் போன்ற வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை விரும்புவீர்கள். சிரித்துப் பேசுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தில் மற்றவர்களை கடுமையாகப் பேசினாலும், உடனே அவர்களை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். சில நேரங்களில் சோம்பேறித்தனத்தால் காரியங்களை முடிப்பதில் சுணக்கம் காட்டுவீர்கள். பல போராட்டங்களைச் சந்தித்தாலும் வாழ்க்கையில் சாதிப்பீர்கள்.


கார்த்திகை 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சனி

மனசாட்சிப்படி நடந்துகொள்வீர்கள். நீதி நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுடன் பழகுவதில் வித்தியாசம் பார்க்க மாட்டீர்கள். தனக்கென்று தனிவழியை ஏற்படுத்திக்கொண்டு அந்த வழியில் நடப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எப்போதும் விளையாட்டுத்தனமாக நடந்துகொள்வீர்கள். அதன் காரணமாகவே படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவீர்கள். வீட்டில் அடைந்துகிடப்பதை விரும்ப மாட்டீர்கள். சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரிய விரும்புவீர்கள். அதனால், குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்தியை தேடிக்கொள்வீர்கள். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக மிகவும் வருத்தப்படுவீர்கள். மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்புவீர்கள். குடும்பத்தினரிடம் பட்டும்படாமல் இருப்பீர்கள். ஆனாலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். 35 முதல் 40 வயதுக்குள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவீர்கள்.

கார்த்திகை - 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - குரு

பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருப்பீர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சத்தியம் தவற மாட்டீர்கள். கல்வி, கேள்விகளில் சிறப்புற்று விளங்குவீர்கள். பெரியவர்களிடம் அடக்கத்துடன் நடந்துகொள்வீர்கள். பலரும் மதித்துப் போற்றும்படி நடந்துகொள்வீர்கள். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், அடக்கத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரக்கம் கொண்டு, உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும், நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். நினைத்தபோதெல்லாம் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர விரும்புவீர்கள். பொல்லாதவர்களைக் கண்டால் விலகிவிடுவீர்கள். தெருவில் சண்டையைக் கண்டால் அச்சத்துடன் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றுவிடுவீர்கள். பெற்றோரிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். அவர்களின் வார்த்தைகளை மீறி எதையும் செய்ய மாட்டீர்கள். சகோதரிகளுக்குத் திருமணம் முடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள நினைப்பீர்கள். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். 

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், சிவபெருமான்

அணியவேண்டிய நவரத்தினம்: மாணிக்கம்

வழிபடவேண்டிய தலம்: திருக்கருப்பறியலூர் - நாகை மாவட்டம்



Trending Articles

Sponsored