வார சூன்ய பரிகாரத் திருகோயில்கள்! - Exclusive Deal



ஜாதகத்தில் சுட்டிக்காட்டப்படும் பலவகையான தோஷங்கள், நம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குத் தடைகளாக இருக்கின்றன. அவற்றில் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்களையும் அவற்றின் பரிகாரங்களையும்கூட பலரும் அறிந்திருப்போம். ஆனால், பலரும் அறிந்திராதது `வார சூன்யம் எனும் தோஷம். திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கிருத்திகை நட்சத்திரம் வரும்போது, அந்த நாள் `வார சூன்யம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள்களில் பிறந்த ஜாதகரின் வாழ்வு நிம்மதியற்ற, தொல்லை நிறைந்த வாழ்வாக இருக்கும் எனவும், ஜாதகர் பெண்ணாக இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. 
வார சூன்ய தோஷம் இருப்பவர்கள் பரிகாரம் செய்து, தோஷத்தையும், பூர்வ ஜென்ம பாவங்களையும் போக்கிக்கொள்ள மூன்று சிவ திருத்தலங்களை வழிபட வேண்டும். அவை பின்வருமாறு...

Sponsored


திருவாஞ்சியம் - அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்
இறைவன்: திருவாஞ்சிநாதர், இறைவி: திருவாழவந்த நாயகி

கும்பகோணத்தில் ஆரம்பித்து, நாச்சியார்கோவில் வழி நன்னிலம் செல்லும் பாதையில் அச்சுதமங்கலம் அடையவும். அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது.

Sponsored


காலை ஆறு மணிக்கு திருவாஞ்சியம் சென்று, அந்த ஊரிலிருக்கும் குப்த கங்கை (யம தீர்த்தம்) குளத்தில் நீராடி, பழைய துணிகளை விட்டுவிட்டு, புத்தாடை அணிய வேண்டும். பின்னர், கோயிலை அடைந்து, முதலில் யமன் சந்நிதியை தரிசித்து, பிறகு இறைவனை தரிசிக்க வேண்டும். யமன் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, பாவ நிவர்த்தி அடைந்ததால் இந்த வழக்கம்.
பரிகாரம்: தாமரை நூல் கொண்டு, இலுப்பை எண்ணெய் இட்டு யமனுக்கு விளக்கேற்றி, வார சூன்யம் விலக அர்ச்சகரிடம் சொல்லி அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். தோஷம் விலக ஏற்றிய விளக்கையும், யமனையும் ஒருசேர வழிபட வேண்டும். பின், இறைவனுக்கும் இறைவிக்கும் இலுப்பை எண்ணெய்விட்டு தாமரை நூலில் தீபம் ஏற்றி, தனித்தனியாக இருவருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன், தீபத்தையும் சுவாமியையும் ஒருசேர மனமுருகி பிரார்த்திக்க வேண்டும்.

Sponsored


செதலப்பதி (சிதலப்பதி) - அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
இறைவன்: முக்தீஸ்வரர், இறைவி: பொற்கொடியம்மை

திருவாஞ்சியத்திலிருந்து நாச்சியார்கோவில் பூந்தோட்டம் ரோடு வழியாக கூத்தனூர் அடையவும். கூத்தனூரிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் செதலப்பதி அமைந்திருக்கிறது.
பத்து மணியளவில் வாஞ்சிநாதசுவாமி கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, காலை 11 மணியளவில் செதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயிலை அடைந்துவிடலாம். ஸ்ரீராமர் வனவாசத்துக்குப் பின்னர் இங்கு வந்து பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் அளித்ததாலும், இங்கு சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து காணப்படுவதாலும், இந்தத்தலம் நித்ய அமாவாசை நிகழும் தலம் எனப்படுவதாலும், இந்தக் கோயில் முன்னோர்களுக்குத் திதி வழங்க சிறந்த தலமாகக் கருதப்படுகிறது. 
பரிகாரம்: இங்கிருக்கும் பிதுர் லிங்கம், இறைவன் மற்றும் இறைவிக்கு தனித்தனியே தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர் மூன்று சந்நிதிகளையும், ஏற்றிய தீபங்களையும் வழிபட்டு வார சூன்யம் விலக வேண்டிக்கொள்ளவும். இங்கிருக்கும் விநாயகர் சந்நிதியில் கணேசர் மனித முகத்துடன் காட்சியளிப்பதால், இந்தக் கோயில் ஆதி விநாயகர் ஆலயம்' எனவும் அழைக்கப்படுகிறது.

திருமியச்சூர் - அருள்மிகு மேகநாதர் ஆலயம்
இறைவன்: மேகநாதசுவாமி, சகல புவனேஸ்வரர், இறைவி: சவுந்தரநாயகி, மேகலாம்பிகை.

செதலப்பதியிலிருந்து மீண்டும் கூத்தனூர் வந்து, பேரளம் செல்லும் பாதையில் பயணம் செய்யவும். பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலிருக்கிறது திருமியச்சூர்.
பரிகாரம்: `நித்திய பிரதோஷ காலம் எனக் கூறப்படும் மாலை 4:30 முதல் 6:00 மணிக்கு, மேகநாதர், சவுந்தரநாயகி மற்றும் புவனேஸ்வரர், மேகலாம்பிகை சந்நிதியில் இலுப்பை எண்ணெயிட்டு தாமரை நூலில் தனித்தனியாக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதன் பின்னர், நந்திகேஸ்வரர் வலது காதில், ஜாதகர் முற்பிறவியில் செய்த கர்ம தோஷங்களையும், திதி சூன்யம், மாத சூன்யம், நட்சத்திர சூன்யம், யோக சூன்யம் மற்றும் வார சூன்யம் உள்ளிட்ட சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யுமாறு பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

வார சூன்ய பரிகாரத் திருக்கோயில்களுக்குச் செல்லும் அன்பர்களுக்கு...

கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். அங்கிருந்து நம் பயணம் தொடங்கி இந்த வரிசையில் கோயில்களை தரிசனம் செய்ய வேண்டும். வார சூன்யப் பரிகாரக் கோயில்களுக்குச் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு பாப்பீஸ் ஓட்டல் (Poppys Hotel) குழுமம் உதவத் தயாராக இருக்கிறது. பாப்பீஸ் குழுமத்தின் எஸ்.இ.டி ரெசிடென்ஸி மற்றும் ஓட்டல் விநாயகா ஆகிய இரு தங்கும் விடுதிகள் கும்பகோணத்தில் இயங்கிவருகின்றன. வார சூன்ய பரிகாரக் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில், பல சேவைகளை வழங்குகின்றன இந்த இரு விடுதிகளும். ஏ.சி அறைகள், சைவ ரெஸ்டாரன்ட், ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி, கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத் தருகிறார்கள்.

தகவல்களுக்கு:
பாப்பிஸ் கும்பகோணம்,
9894091113
crs@poppyshotels.com 

முற்பிறவி மற்றும் இந்தப் பிறவியில் செய்த பாவங்களையும், நம் முன்னோர் வழிவந்த தீய கர்மங்களையும், வார சூன்ய தோஷத்தையும் இந்த மூன்று சிவத்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து விலக்கிக்கொள்ளலாம்! நமசிவாய! 

வாசகர்களுக்கு சிறப்பு சலுகை: இரண்டு இரவுகள் தங்குவோருக்கு, இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50% சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு க்ளிக் செய்க...
 



Trending Articles

Sponsored