இந்த வார ராசிபலன் ஜூன் 25 முதல் ஜூலை ஒன்று வரை



மேஷம்: மேஷராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வாரப் பிற்பகுதியில் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை  மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பண வரவு இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.

Sponsored


அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை அமையும். எதிர்பார்த்த சலுகை  கிடைக்கும்.

Sponsored


புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

Sponsored


கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்:  அசுவினி: 25, 28, 29, 30, 1; பரணி: 25, 26, 29, 30, 1; கார்த்திகை: 25, 26, 27, 1

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: அசுவினி: 26, 27; பரணி: 27, 28; கார்த்திகை: 28, 29, 30

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

ரிஷபம்:  ரிஷபராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

 அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 

கார்த்திகை: 25, 26, 27, 1; ரோகிணி: 26, 27, 28; மிருகசீரிடம்: 25, 27, 28, 29, 30 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்: கார்த்திகை: 28, 29, 30; ரோகிணி: 25, 29, 30, 1; மிருகசீரிடம்: 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 

மிதுனம்: மிதுனராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர் பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 

மிருகசீரிடம்: 25, 27, 28, 29, 30; திருவாதிரை: 25, 26, 28, 29 30, 1; புனர்பூசம்: 25, 26, 27, 29, 30, 1

அதிர்ஷ்ட எண்கள்: 7, 8

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மிருகசீரிடம்: 26, 1; திருவாதிரை: 27; புனர்பூசம்: 28

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

கடகம்: கடகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.
கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை, படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம்: 25, 26, 27, 29, 30, 1; பூசம்: 26, 27, 28, 1; ஆயில்யம்: 27, 28, 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

புனர்பூசம்: 28; பூசம்: 25, 29, 30; ஆயில்யம்: 25, 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.  
 

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தையுள்ளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்திவழிபடப் பெற்ற
காலகாலனை கம்பன் எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே

சிம்மம்: சிம்மராசி அன்பர்களே!

பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர் தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

மகம்:25, 28, 29, 30, 1; பூரம்: 25, 26, 29, 30, 1; உத்திரம்: 25, 26, 27, 1

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மகம்: 26, 27; பூரம்: 27, 28; உத்திரம்: 28, 29, 30

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 

கணபதியைக் கைதொழுதக் கால்.

கன்னி: கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். 

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

உத்திரம்: 25, 26, 27, 1; அஸ்தம்: 26, 27, 28; சித்திரை: 25, 27, 28, 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

உத்திரம்: 28, 29, 30; ஹஸ்தம்: 25, 29, 30, 1; சித்திரை: 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

துலாம்:துலாம்ராசி அன்பர்களே!

குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. 

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

சித்திரை: 25, 27, 28, 29, 30; சுவாதி: 25, 26, 28, 29, 30, 1; விசாகம்: 25, 26, 27, 29, 30, 1

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

சித்திரை: 26, 1; சுவாதி: 27; விசாகம்: 28

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 

விருச்சிகம்: விருச்சிகராசி அன்பர்களே!

பணவரவு  திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.
குடும்பநிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். ஆனாலும் உற்சாகமாக காணப்படுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம்: 25, 26, 27, 29, 30, 1;  அனுஷம்: 26, 27, 28, 1; கேட்டை: 27, 28, 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

விசாகம்: 28;  அனுஷம்: 25, 29, 30; கேட்டை: 25, 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

தனுசு:தனுசுராசி அன்பர்களே!

பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி இருக்கும்.
அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

மூலம்: 25, 28, 29, 30, 1; பூராடம்: 25, 26, 29, 30, 1; உத்திராடம்: 25, 26, 27, 1

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

மூலம்: 26, 27; பூராடம்: 27, 28; உத்திராடம்: 28, 29, 30

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

மகரம்: மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு, அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

உத்திராடம்: 25, 26, 27, 1; திருவோணம்: 26, 27, 28; அவிட்டம்: 25, 27, 28, 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

உத்திராடம்: 28, 29, 30; திருவோணம்: 25, 29, 30, 1; அவிட்டம்: 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

கும்பம்:கும்பராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதியஉயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

அவிட்டம்: 25, 27, 28, 29, 30; சதயம்: 25, 26, 28, 29, 30, 1; பூரட்டாதி: 25, 26, 27, 29, 30, 1

அதிர்ஷ்ட ஏண்கள்: 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

அவிட்டம்: 26, 1; சதயம்: 27; பூரட்டாதி: 28

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

மீனம்: மீனராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

பூரட்டாதி: 25, 26, 27, 29, 30, 1; உத்திரட்டாதி: 26, 27, 28, 1; ரேவதி: 27, 28, 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

தவிர்க்க வேண்டிய நாள்கள்:

பூரட்டாதி: 28; உத்திரட்டாதி: 25, 29, 30; ரேவதி: 25, 26, 1

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே...



Trending Articles

Sponsored