​குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலங்கள்! - Exclusive DealSponsoredஆத்தாள், அம்பிகை, அம்பாள், அம்மன் என இறைவியை அழைக்கிறோம், காரணம் ‘அவள் நம் அன்னை’ எனும் எண்ணமே இதன் வெளிப்பாடு. பிற உயிரினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு கடவுள் பற்றிய அதீத நம்பிக்கையும், அனுபவமும், அறிவும் ஏற்படக் காரணம் நம் சமுதாயத்தில் அன்னை என்ற ஸ்தானத்தின் மேல் நாம் வைத்திருக்கும் அளவுகடந்த அன்புதான் எனலாம். அன்பே இறைவன் என அறிவதற்கு, அன்பென்றால் என்னவென்று நமக்குத் தெரிய வேண்டுமல்லவா? அந்த அன்பின் பரிபூரண சொரூபமாய் விளங்குபவள் தாய், அதனாலேயே இறைவியை உரிமையோடு ‘அம்மா’ என அழைக்கிறோம்! 

​குழந்தைச் செல்வம் என்பது பாக்கியம். ஆணும் பெண்ணும் திருமணமாகி சந்தான பாக்கியம் பெறும்போது, தாய் தந்தை எனும் பதவியைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் முக்கியமான இடத்தை வந்தடைகின்றனர். சில பெண்களுக்கு சில காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் அடையாமல் ஏங்குவோரும் உண்டு.​ அனைத்து உயிருக்கும் அன்னையாய் இருக்கும் அம்பிகையின் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்குச் சென்று வழிபடும்போது இந்த பிரச்னை விலகுகிறது.

Sponsored


கருவளர்​சேரி​ திருத்தலம்

Sponsored


சகல உயிர்களுக்கும் அன்னையான இறைவி, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’ தாயாக அருள்பாலிக்கிறாள். இறைவன்: அருள்மிகு அகஸ்தீஸ்வரர். ​கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு உடல்ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். அதனாலேயே தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர்.


திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் அவள் சந்நிதியில் பூசை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூசி வர தடைகளை எல்லாம் நீக்கி, மகப்பேற்றை அருளுகிறாள் கருவளர் நாயகி அன்னை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோயிலுக்கு வந்து தொட்டில், வளையல் ஆகியவற்றை வேண்டுதல் பொருளாக சமர்ப்பிப்பதையும் நாம் காணமுடிகிறது.​

​கு​ம்பகோணம் & வலங்கைமான் பாதையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. ​​கோயில் நேரம் காலை 8 மணி முதல் 12 மணிவரை; மாலை 4 மணி முதல் 8 மணிவரை. இந்த ஊருக்கு அருகிலேயே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாத நாயனார் பிறந்து முத்தி பெற்ற தலமான ஏனநல்லூருக்கும் சென்று இறைவனை வழிபட்டு வரலாம்.

திருக்கருகாவூர் ​திருத்தலம்

​​இறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. கரும்பைப் போல் இனிமையானவள் என்பதால் அம்பிகைக்கு கரும்பணையாள் என்ற திருப்பெயரும் உண்டு.​ குழந்தை பாக்கியம் தடைப்படும் பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமுருக வேண்டி, நெய்யினால் சந்நிதியின் படிகளை மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப்பேறு கிட்டும். இந்த பிரார்த்தனையை வாரத்தின் அனைத்து நாள்களிலும் செய்யலாம்.​ ​பிரார்த்தனை நிறைவேறப் பெற்றவர்கள் தொட்டில் கட்டி, துலாபாரம் தூக்குகின்றனர்.​ அம்மனிடம் வைத்து பூசிக்கப்பட்ட விளக்கெண்ணெயையும் பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். கர்ப்பத்தினால் வலி ஏற்படும்போது இந்த எண்ணெயைத் தேய்த்தால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர்​, பாபநாசம் வழியாக இக்கோயிலை அடையலாம். ​கோயில் நேரம் காலை 6 மணி முதல் 12 மணிவரை; மதியம் 3 மணி முதல் 8 மணிவரை.

​​​புத்திர பாக்கியம் அருளும் அபிராமி அந்தாதி​ ​பாடல்​ -​ 65:
ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!

​இந்தக்​ கோயி​ல்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு...
இந்தத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு, கும்பகோணம் பாப்பீஸ் குழுமத்தின் ஓட்டல் விநாயகா மற்றும் பாப்பீஸ் எஸ்.இ.டி. ரெசிடென்ஸி ஆகிய இரு தங்கும் விடுதிகள் உதவுகின்றன. ஏ.சி. அறைகள், சைவ ரெஸ்டாரென்ட், ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி, கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத்தருகின்றனர். 

தகவல்களுக்கு:
பாப்பிஸ் கும்பகோணம்,

9894091113
crs@poppyshotels.com 

வாசகர்களுக்கு சிறப்பு சலுகை: இரண்டு இரவுகள் தங்குவோருக்கு, இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50% சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு க்ளிக் செய்க...
 Trending Articles

Sponsored