அப்துல் கலாமுக்கு வழிகாட்டிய மகான்! - சுவாமி சிவானந்தர் நினைவுதினப் பகிர்வு #SivanandaSponsoredமிழகத்தில் தாமிரபரணி நதிக்கரையில், குப்புசாமி என்னும் பெயரில் பிறந்து, மலேஷியாவில் மருத்துவராகச் சேவை செய்து, இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து, உலகுக்கே ஆன்ம ஒளி காட்டிய மகான், சுவாமி சிவானந்தர். 'தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்' என்று அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்தும் காட்டிய மகான். சிவானந்தரது வாழ்வே அவரது உபதேசம். மனிதநேயம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். 'வாழ்வின் இறுதி நிமிடம் இது' என்று வழி தெரியாமல் நின்றவர்கள்கூட, அவரது வழிகாட்டுதலால் வாழ்க்கையின் உன்னதத்தை அறிந்து மீண்டிருக்கிறார்கள். 

மருத்துவர் குப்புசாமி மலேஷியாவில் மருத்துவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம் அது. ஒரு நாள், ஏழை ஹரிஜனப் பெண் ஒருத்தி பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். ரப்பர் தோட்டத்தில் பணிபுரிபவர்களில் அவளும் ஒருத்தி. அவளுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. செய்தி, மருத்துவர் குப்புசாமிக்குக் கிடைத்தது. உடனே அந்த ஏழைப் பெண்ணின் குடிசைக்கு ஓடியவர், வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். அவளுடைய வலியைக் குறைக்க மருந்துகளைக் கொடுத்தார். ஒரு பெண்ணின் உதவியுடன் அவளுக்குப் பிரசவம் பார்த்ததுடன், இரவு அவளது குடிசையிலேயே துணையாகத் தங்கினார். தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதி செய்த பிறகே தனது குடிலுக்குத் திரும்பினார் மருத்துவர் குப்புசாமி. தீண்டாமை அதி தீவிரமாக இருந்த காலம் அது. அந்தச் சூழலில் தமிழகத்தின் பாரம்பர்யமிக்க ஓர் அந்தண குடும்பத்தில் பிறந்து, ஏழைப் பெண்ணுக்குத் தாயுமானவராக இருந்து உதவி செய்தவர் மருத்துவர் குப்புசாமி.

Sponsored


'மனதில் இருக்கும் நோய்கள் நீங்கினால், உடலில் இருக்கும் நோய்கள் தானாக நீங்கிவிடும்' என்பதை உணர்ந்த மருத்துவர் குப்புசாமி, மனதில் இருக்கும் நோய்களை நீக்கும் மருந்து ஆன்மிகத்தில்தான் இருக்கிறது என்பதையும் தெரிந்தே வைத்திருந்தார். அதன் காரணமாக ஆன்மிக நாட்டம் கொண்டு தாயகத்துக்குத் திரும்பினார். ரிஷிகேசத்தை அடைந்த குப்புசாமி, சுவாமி விஸ்வானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம், `சுவாமி சிவானந்த சரஸ்வதி’ என்ற பெயரில்  சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார்.  சந்நியாச ஆசிரமம் மேற்கொண்ட சுவாமி சிவானந்தர்,  தவத்திலும் தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ரிஷிகேசத்தில் 'தெய்வ நெறிக்கழகம்' எனும் ஆசிரமத்தைத் தொடங்கி தன்னுடைய கருத்துகளை சொற்பொழிவுகள், புத்தகங்கள், மற்றும் சுற்றுப்பயணங்கள் மூலமாக மக்களிடையே பரப்பி மக்களுக்கு ஆன்மிகத் தொண்டாற்றினார்.

Sponsored


ஒரு நாள் சுவாமி சிவானந்தர் கங்கை நதிக்கரையில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் இளம் பெண் கங்கை நதியையே பார்த்தபடி கவலையுடன் நின்றுகொண்டிருந்தாள். அவளிடம் சென்று விசாரித்தார் சுவாமி சிவானந்தர். முதலில் அந்தப் பெண் தயங்கினாலும், பிறகு அழுதபடி நடந்ததைக் கூறினாள்... அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆனால், கருத்தரித்திருந்தாள். சமூகத்துக்கு பயந்து, கங்கையில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்திருந்தாள். வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைத் தனது ஆசிரமத்துக்கு அழைத்துவந்து, தகுந்த பெண் துணையோடு தங்கவைத்தார். பிறகு உரிய நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 

ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதிக்கு மகப்பேறு இல்லை. குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்த அவர்களிடம், ''கடவுள் உங்களுக்காக இந்தக் குழந்தையை அனுப்பியிருக்கிறார்'' என்று சொல்லி அந்தக் குழந்தையைக் கொடுத்தார் சுவாமி சிவானந்தர். குருவின் கைகளிலிருந்து அந்தக் குழந்தையை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்று, அணைத்துக்கொண்டனர். அதன் பிறகு அந்த இளம் பெண் அவளுடைய வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்.

நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், சுவாமி சிவானந்தரையே தனது குருவாகக் கூறுவார். அப்துல் கலாமின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர். அப்துல் கலாமின் இளம் வயதில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பார்ப்போம்... 

விமானப் படையின் பைலட் தேர்வில் தோற்றிருந்ததால் மனம் ஒடிந்து விரக்தியான நிலையில் கலாம் இருந்த காலம் அது. அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் கலாம் ஒன்பதாவது இடத்தைப் பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு முன்பு இடம் பிடித்திருந்த எட்டு பேருக்கும் வேலை கிடைத்தது. கலாமுக்குக் கிடைக்கவில்லை. கலாமின் சிறு வயது கனவு விமானியாக வேண்டும் என்பதே. வாழ்நாள் கனவு சிதைந்து போனதை எண்ணிக் கவலையுடன் ரிஷிகேசத்தில் மலை முகட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார் அவர். 'மாணவன் தயாரானவுடன் ஆசிரியர் தானாகக் கிடைப்பார்' என்பார்கள். அதைப் போலவே குருவாக கலாமிடம் சென்றார் சுவாமி சிவானந்தர். கலாம் நடந்ததை அவரிடம் கூறினார். 

கலாம் கூறியதைக் கேட்டதும் சிவானந்தர், "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல்" என்று அறிவுரை கூறினார். `அந்தத் தருணம்தான் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். அன்று மட்டும் கலாம் சோர்ந்து போயிருந்தால் இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி நமக்குக் கிடைத்திருக்க மாட்டார். கலாமுக்கு மட்டுமல்லாமல் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் வாழ்வில் ஆன்மிக ஒளி ஏற்றியவர் சுவாமி சிவானந்தர். சுவாமி சிவானந்தர் போற்றிய மனித நேயத்தை நாமும் போற்றி, தொண்டு செய்வோம்..!Trending Articles

Sponsored