உடல்நல குறைவால் பாதிக்கபட்ட சமயபுரம் யானை மசினிக்கு ஒரத்தநாட்டில் சிகிச்சை!Sponsoredதிருச்சி சமயபுரம் கோயில் யானை மசினி கால் மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட வீக்கம் போன்ற நோய்களால் அவதிபட்டு வந்தது.  இதையடுத்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவகல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டவரப்பட்டு மசினிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

சமயபுரம் கோயில் யானை மசினிக்கு மதம் பிடித்து பாகன் ராஜேந்திரனை மித்தித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் 9 வயதான யானை மசினி கால் மற்றும் அடி வயிற்றில் வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கபட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஒரத்தநாடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து 4 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு திருச்சி சமயபுரம் சென்று யானை மசினிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

Sponsored


இதில் யானையின் கால் வீக்கம் குறைந்துவிட்டது. ஆனால்  யானையின் அடிவயிற்றில் உள்ள வீக்கம் மட்டும் குறையவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக யானை மசினியை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு யானைக்கு இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் சென்னை கால்நடை மருத்துவக்கல்லுாரி மருத்தவமனையின் தலைமை மருத்துவர் வரவழைக்க்பபட்டு, நாளை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மோகன் தெரிவித்தார்.

Sponsored


இது குறித்து சிலரிடம் பேசினோம், ``யானை மசினி மதம் பிடித்து பாகனை கொன்றதில் இருந்தே உடல் நிலை பாதிக்கபட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் இன்னும் சரியாக குணமாகவில்லை. பாகன் ராஜேந்திரன் இல்லாதது வேறு மசினிக்கு கடும் வேதனையை தந்து தவித்து வருகிறது. மசினியால் முன்பு போல் இருக்க முடியவில்லை. மேலும் அடி வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் கால்நடை மருத்துவகல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தால் சீக்கிரமே குணாமாகிவிடும் என்பதால் அழைத்து வந்துள்ளோம்" என்றனர்.Trending Articles

Sponsored