நீதிமன்ற தடையை எதிர்த்து கோயில் வளாகத்தில் 1008 விளக்குகள் ஏற்றி போராட்டம்!Sponsoredஇந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிகளில் விளக்கேற்றி வழிபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான தடையை உடனே நீக்கக் கோரியும் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் தடையை மீறி 1008 அகல் விளக்குகள் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில்  நீதிமன்ற உத்தரவுப் படி விளக்கேற்றுவதற்குத் தடை விதிக்கபட்டுளதாக அறிவிக்கப்பட்டது. இது ஆன்மீக ஆர்வலர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இதற்கு  கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருவதோடு இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் கோயில்களின் முகப்பில்  நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கேற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக போர்டும் வைத்தனர் கோயில் நிர்வாகத்தினர். மேலும் எண்ணெய் மற்றும் நெய் விளக்கும் திரி போன்ற விளக்கு ஏற்றப்படுவதற்கு தேவையான பொருள்கள் விற்பனையையும் நிறுத்தப்பட்டது

Sponsored


இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பாணா துறையில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான பாணபுரீஸ்வரர் கோயிலில் 1008 விளக்குகள் ஏற்றி வழிபாடு மற்றும் பிரார்த்தனை நடத்தி போராட்டம் நடத்தப்படும்  என அறிவித்திருந்தனர். தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோயிலின் முன்பு கூடிய அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி போராட்டம் நடத்தினர். இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தியிடம் பேசினோம், "இந்துக்கள் கோயிகளில் வழிபடும் போது விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகக் கோயிலின் ஒரு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் விளக்கேற்றி தங்களுக்கான தேவையானவற்றைக் கேட்டும், பிரச்னையில் இருந்து காக்கவும் வேண்டிக் கொள்வது வழக்கம். இது பல காலமாக கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று. இப்போது திடீரென கோயிகளில் விளக்கேற்றுவதற்கு தடை விதித்து இருப்பது ஏன் எனப் புரியவில்லை.

Sponsored


மேலும் இந்து சமய அற நிலையத்துறைக்கும் இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அகல் விளக்குகள், எண்ணெய், திரி நூல் போன்றவற்றை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வாழ்வாதாரமும் கெடுகிறது. கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையில் தலையிடாமல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி தருவதோடு அதற்கான பாதுகாப்பையும் செய்து தர வேண்டும்.

நாங்கள் போராட்டம் நடத்துகிறோன் என அறிவித்ததும் காலை ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய கோயிலை எட்டு மணிக்குத் திறந்து ஆகம விதிகளின் படி நடக்க வேண்டிய பூஜைகளை செய்யாமல் மீறியிருக்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இதனையும் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கான தடையை நீக்க வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்" என்றார்Trending Articles

Sponsored