சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு கொடியேற்றம்!Sponsoredநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி-கோமதியம்பாள் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணசுவாமி-கோமதியம்பாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசுத் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Sponsored


இந்தக் கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் நாளான வரும் 23-ம் தேதி இரவு அம்பாள் பூப்பல்லக்கு சப்பரத்தில் வீதி உலா வரவுள்ளார். 9-ம் நாள் விழா 25-ம் தேதி நடக்கிறது. அன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாள் விழாவில் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்தல் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா ஆகியவை நடக்க உள்ளன. 

Sponsored


விழாவின் சிகர நிகழ்வான தபசுத்திருவிழா வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது. அன்று சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும் இரவு 9 மணிக்கு சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சியளிக்கும் முக்கிய நிகழ்வு நடக்க உள்ளது. ஆடித்தபசு திருவிழாவையொட்டி 27-ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Trending Articles

Sponsored