`செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஆடி மாதம்!’ - கோயில்களில் குவிந்த பக்தைகள்



இந்தாண்டு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில், பஞ்சமி திதியில் அதுவும் அம்பாள் அவதரித்த பூர நட்சத்திரத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதுபோல் அமைவது பல ஆண்டுகளுக்குப் பின்புதான் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.  

Sponsored


இதுபற்றி ஆன்மிக அன்பர்களிடம் பேசியபோது, ``ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக உள்ளதால், இம்மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கடல் அல்லது நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பெரும் புண்ணியம் தரும். ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் காவிரியிலும் அதன் கிளை நதிகளிலும் மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்துவார்கள்.  

Sponsored


ஆடி மாதத்தின் மகிமையை அறியாமல் அதை பீடை மாதம் என்று அழைப்பதே தவறு. உண்மையில், மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் ஆடி என்பதே சரியானது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலெட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்று வரலெட்சுமி விரதமிருந்தால் கூடுதல் பலன் கிடைக்கும். ஆடி மாத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் சூட்சம கதிர்களில் பிராணவாயு அதிகமாக இருக்கும். இவை உயிர்களுக்கு ஆதார சக்தியைத் தரும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு மாதங்களில் ஆடி மாதமே சிறந்தது.  

Sponsored


அம்மனுக்கு இந்த மாத்தில்தான் சிறப்பு வழிபாடு நடக்கும். காரணம் ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட பார்வதி சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோயில்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால், இதை ஒருபோதும் வீட்டில் ஏற்றக்கூடாது. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஆடித் தபசு, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால் நாகை மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பெண் பக்தர்கள் இன்று காலை முதலே வழிபட்டு வருகிறார்கள்’’ என்றனர்.



Trending Articles

Sponsored