முருகனிடமிருந்து சுட்டபழம் பெற்ற ஔவையாரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையலிட்ட பெண்கள்!ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஔவையார் அம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு செய்தனர்.

Sponsored


ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதமாகும். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இன்று ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில் பிறந்திருக்கிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் அமைந்துள்ள ஔவையார் அம்மன் கோயிலில் பெண் பக்தர்கள், கூழ் கொழுக்கட்டை அவித்து படையலிட்டு அம்மனை வழிபட்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் அதிக அளவு பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை படையலிட்டனர்.

Sponsored


Sponsored


சங்ககாலப் புலவரான அவ்வையார் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருமணம் நடத்தி வைத்துவிட்டு கன்னியாகுமரி மாவட்டம் வந்திருக்கிறார். அப்போதுதான் ஔவையாரின் புலமையைச் சோதிக்க விரும்பிய முருகப்பெருமான், ஆடு மேய்க்கும் சிறுவனாகத் தோன்றி சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு திருவிளையாடல் புரிந்தார். அவ்வாறு திருவிளையாடல் புரிந்த தலம்தான் தாழக்குடி. இங்குதான் ஔவையாரைப் பெண்கள் அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயில் அருகே குமரகுருபரர் முருகன் கோயிலும் அமைந்திருக்கிறது.

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். முதல் செவ்வாய்க்கிழமையான இன்று, நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் கூழ் கொழுக்கட்டை செய்து அம்மனுக்குப் படையலிட்டனர். ஆடி மாதம் அனைத்து செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும் இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அதிலும் கடைசி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கொழுக்கட்டை படையலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.Trending Articles

Sponsored