அழகர்கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!மதுரை அழகர்கோயிலில் அடி பிரமோற்சவ ஆடித் திருவிழா இன்று மங்கள வாத்தியத்துடன் பக்தர்கள் முன் கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Sponsored


மதுரை மாவட்டம், அழகர்கோயிலில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் தொடங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மலை மேல் உள்ள நூபுரக கங்கை ராக்காச்சி அம்மன் தீர்த்தமாடி அதை வீடுகளில் தெளிப்பதால் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதிகம். இந்த நிலையில் இன்று ஆடித்திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து 10 நாள்கள் வெகு விமரிசையாக  நடைபெறும். ஆடித் திருவிழாவின் முதல்நாளான இன்று ஆடி பிரமோற்சவத்தை முன்னிட்டு கோயிலில் முன்புள்ள கொடி மரத்தில் பட்டர்கள் வேதங்கள் முழங்கவும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. அப்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தாயாருடன் காட்சியளித்தார்.

பின்னர், கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இன்று முதல் 10 நாள்களும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 27-ம் தேதி காலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுப்பர். ஆடிப்பெருக்கை காண பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வண்டிகட்டிக்கொண்டு வருவார்கள். தாங்கள் கொண்டுவரும் சேவல், ஆடுகளை அழகர்மலையானுக்கு படைத்து உறவினர்களுக்கு விருந்தளிப்பார்கள். `திருவிழா தொடங்கியதையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்புப் போடப்படும்'' எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored