ஆன்ம சக்தி அருளும் அற்புத சந்திர கிரகணம்... என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? #LunarEclipseந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (27.07.2018) நடைபெறவிருக்கிறது. நள்ளிரவு 11:54 மணிக்குத் தொடங்கி அதிகாலை 03:49 மணிக்கு முடிவடையும் கிரகணத்துக்கு `கேது கிரகஸ்த சந்திர கிரகணம்' என்று பெயர். `கிரகணத்தின்போது கோயில் நடைகள் சாத்தப்படும்’ என்று திருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட முக்கியக் கோயில்கள் ஏற்கெனவே அறிவித்துவிட்டன. 

Sponsored


சந்திர கிரகணத்தின்போது கோயில் நடை எதற்காக மூடப்படுகிறது, கிரகண காலத்தில் வழிபாடு செய்யலாமா என்பதெல்லாம் குறித்து குமார சிவாசாரியர் மற்றும் பாலாஜி பட்டர் ஆகியோரிடம் பேசினோம்...

Sponsored


குமார சிவாசாரியர், ``நவகிரகங்கள் வக்ரம் அடையும் காலம் வந்தாலோ அல்லது இன்னொரு கிரகத்தோடு சேர்க்கைகொண்டிருந்தாலோ, அந்தக் காலகட்டத்தில் நவகிரகங்கள் தங்கள் சக்தியை இழக்க நேரிடும். கேது மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகத்துக்குமிடையில்

 நடைபெறும் வானியல் நிகழ்வே சந்திர கிரகணம். இந்தக் காலகட்டத்தில், கிரகங்கள் ஒன்றோடு மற்றொன்று சேர்ந்திருக்கும். அதைப் `பாதி பலமுடைய காலம்' என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே கிரகண காலத்தில் ஆலய வழிபாடுகள் செய்யக் கூடாது. ஒரு நாளின் தன்மை என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்டது. சந்திர கிரகணத்தின்போது சிவாலயங்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களைத் தவிர்த்துவிட வேண்டும். ஆனால், தியானம் மற்றும் குருவிடம் உபதேசம் பெறுவதற்கு சந்திர கிரகண காலம் மிகவும் ஏற்றது.

Sponsored


கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே கிரிவலம் செல்பவர்கள் வழிபாட்டை முடித்துவிட வேண்டும். கிரகணத்தின்போது சிவாலயங்களைத் திறந்து வைத்திருக்கக் கூடாது. கிரகணம் முடிந்து சூரியன் உதயம் ஆன பிறகு, புண்ணியாகவாசனம் செய்து, வருணனைக் கலசத்தில் ஆவாஹனம் செய்து கோயிலில் தெளித்த பிறகே, சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும்.

கிரகணத்தின்போது, கிழக்கு மேற்கே சந்திரனும் சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் பூமியோடு 180 டிகிரியில் சஞ்சரித்திருக்கும். இந்த நிலையில், ஆன்மகாரகன் சூரியன் மற்றும் மனோகாரகன் சந்திரன் ஆகியோர் அதீத உணர்வு நிலையில் இருப்பார்கள். அந்தத் தருணத்தில் உடலையும் உள்ளத்தையும் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. இந்த நேரத்தில் அனைவரும் ஆன்ம சக்தி பெறக்கூடிய தியானத்தில் ஈடுபட்டால் ஆன்மா வலிமையடையும்.

இந்த கிரகண காலத்தில் சந்திரனின் ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் உணவு உண்ணக் கூடாது. செய்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களில் தர்ப்பைப் புல்லைப் போட்டுவைக்க வேண்டும். இல்லையென்றால் கெட்டுப்போய்விடும். சந்திர கிரகணம் வருவதால் முன்னோர்களுக்கு பௌர்ணமி அன்று சிராத்தம் செய்யக் கூடாது. அடுத்த நாள்தான் செய்ய வேண்டும். வெளியூர்ப் பயணத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின்போது சந்திரனைப் பார்க்கக் கூடாது. கிரகணம் முடிந்த பிறகு வெளிப்படும் பௌர்ணமி நிலவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. அனைத்து தோஷங்களும் விலகிவிடும்’’ என்று விளக்கமளித்தார்.

பெருமாள் கோயில் நடை சாத்தப்படுவது குறித்தது ஸ்ரீரங்கம் கோயில் பாலாஜி பட்டர்... "கிரகணத்தின்போது கோயில் நடை திறந்திருக்கக் கூடாது. சந்திர கிரகண காலத்தை `அசுவ நேரம்’, `கெட்ட நேரம்’ என்றும் கூறலாம். கிரகணத்தின்போது `சாயா’ என்ற நிழல் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது சகலத்துக்கும் கெடுதலை விளைவிக்கக்கூடியது. அதனால்தான் கிரகணத்தால் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கோயில் நடைகளைச் சாத்திவிடுகிறோம். நடை சாத்திவிட்டு, கிரகணத்தின்போது பெருமாளுக்கு மட்டும் தனியாக ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். வேறு வழிபாடு இருக்காது. கிரகணம் முடிந்த பிறகு, கிரகணத்தால் ஏற்பட்ட பீடை நீங்க  புண்ணியாகவாசனம் செய்து மந்திர நீரை அனைத்து இடங்களிலும் தெளிப்போம்’’ என்கிறார்.Trending Articles

Sponsored