பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய அன்னை பேராலய 436-வது ஆண்டு தேர்பவனி!Sponsoredஉலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436-ம் ஆண்டு திருவிழாவின் 10-ம் நாள் திருவிழாவான இன்று (05.08.18) நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற பனிமய அன்னை பேராலயத்தின் 436-வது திருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாள்களாக நடைபெற்று வரும் இந்த விழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், ஏழை எளியோர் வளம் பெற, மாணவ மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடைபெற்று வருகிறது.

Sponsored


பல ஆலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும். உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் எட்டு திருப்பலிகள் நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பாகும்.

Sponsored


9-ம் நாள் திருவிழாவான நேற்று ஆலய வளாகத்துக்குள் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. 10-ம் நாள் திருவிழாவான  இன்று நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. வீதிகளில் ஒரு ஓரங்களிலும் உள்ள வீடுகளின் வாசல்களில் மக்கள் சாம்பிராணி போட்டும், பூக்களை சப்பரத்தின் மீது தூவியும் பிரார்த்தனை செய்தனர். நாளை காலை கொடி இறக்க சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.Trending Articles

Sponsored