ஆடிப் பூரம் தினத்தில் அம்மனை வழிபடுவோம்...!



Sponsored



`தட்சிணாயன’ புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பூரம் நட்சத்திர நாளில் அம்பாளைத் தரிசிப்பதும் வழிபடுவதும் சகல நன்மைகளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். 

பூரம் என்ற சொல்லுக்கு ‘பெருக்கு’ எனும் பொருள் உண்டு. தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவது போல், நல்ல காரியங்களில் செழிப்பை அடையச் செய்யும் தகுதி பூரத்துக்கு உண்டு. குறிப்பாக ஆடி மாதத்தில் ஆடிப் பூர நாள் மிகவும் சிறப்பானது. `அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்தது ஆடிப்பூரம் திருநாளில்தான்.

Sponsored


பார்வதி தேவி ருதுவான நாள் ஆடிப் பூரம் என்று புராணங்கள் கூறுகின்றன.  அதனால், ஆடிப் பூரத்தில் அம்பிகையை வழிபட்டால் வழிபட்ட பலன்களும் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

Sponsored


அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள். இந்தத் தினத்தில் அம்பாளை தரிசித்து வழிபட்டு, அன்னையின் சந்நிதியில் வழங்கப்படும் வளையல் பிரசாதத்தைப் பெற்று வருவதால், கன்னிப் பெண்களுக்கு மங்கல வாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும், வீட்டில் வறுமை நீங்கி செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை. 

நாளை ஆடிப்பூர நாள். அம்பாளை வழிபட்டு அளப்பரிய நன்மைகளைப் பெற்று மகிழ்வோம்.  
 



Trending Articles

Sponsored