அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! - களைகட்டிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்Sponsoredஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. உலகப் புகழ்பெற்ற இந்தத் தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பக்திப் பரவசத்துடன் ரதத்தை இழுத்துச் சென்றனர். `கோவிந்தா, கோவிந்தா’ எனக் கோஷமிட்டபடி மக்கள் கூட்டம் நகர்ந்தது. 

தேர், காலை 7.20 மணிக்கு தெற்கு ரத வீதியிலிருந்து புறப்பட்டது. பின்னர், வடக்கு ரத வீதி, மேல மாட வீதியைக் கடந்து கீழ ரத வீதி வழியாக  9.30 மணிக்கு தடத்துக்கு வந்து சேர்ந்தது. மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்த வீதிகள் அழகாகக் காட்சியளித்தன. பெண்கள் கோலாட்டம் ஆடி முன்னே  செல்ல ஆண்டாளும் ரெங்கமன்னரும் பின்னே ரதத்தில் அழகாக வலம் வந்தனர். கடந்த வருடத்தைவிட இந்த வருடம் கூட்டம் களைகட்டியது. எஸ்.பி ராஜராஜன் தலைமையில் காவலர்கள் சிறப்பான முறையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். பொதுமக்களும் காவல் துறையின் விதிகளையும் அறிவிப்புகளையும் முறையாகப் பின்பற்றினாா்கள். 

Sponsored


Sponsored


அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இருந்தது. 3 வேன்கள், இருசக்கர வாகனங்கள் உதவிக்குப் பயன்படுத்தப்பட்டன. 20 பணியாட்கள் உதவிப் பணிகளைச் செய்தனர். ஒவ்வொரு நிகழ்வும் சிலிர்ப்பை ஏற்படுத்திய வண்ணம் அமைந்தது, பக்தர்கள் பரவசத்தோடு ஆண்டாளையும் ரெங்கமன்னரையும் தரிசித்தனர் தமிழ்நாடு மட்டும் அல்லாது பிற பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்தது. உள்ளூர் மக்கள், வந்திருந்த அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்று உபரிசத்தனர். 
 Trending Articles

Sponsored