ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப் பூரத்திருவிழா... ஆண்டாள் வீதியுலா தரிசனம்! #VikatanPhotoStorySponsoredடி மாதம், பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள் ஆண்டாள். அவளது அவதாரத் திருத்தலமான ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வருடமும் ஆடிப் பூர நட்சத்திரத்தையொட்டி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதுண்டு. இந்த ஆண்டு திருவிழாவின் புகைப்படக் காட்சிகள்...

பூமிதேவியின் அவதாரமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள் ஆண்டாள். திருக் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது...

Sponsored


Sponsored


முதல் நாள் பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரங்கமன்னாருடன் வீதியுலா வந்த திருக்காட்சி...


 

இரண்டாம் நாள் ஶ்ரீஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஶ்ரீரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய எழிலார்ந்த திருக்காட்சி...

மூன்றாம் நாள் ஶ்ரீஆண்டாள் தங்கப்பரங்கி நாற்காலியிலும் ஶ்ரீரங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் எழுந்தருளிய காட்சி...

நான்காம் நாள் ஶ்ரீஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீரங்கமன்னார் கோவர்த்தனதாரி கோலத்திலும் உலா வந்த காட்சி...

ஐந்தாம் நாள் ஐந்து கருட சேவை உற்சவம் மங்களாசாசனத்துடன் நடைபெற்றது. ஶ்ரீஆண்டாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி...

ஆறாம் நாள் ஶ்ரீஆண்டாள் கனக தண்டியல் மூக்குத்தி சேவையிலும் ஶ்ரீரங்கமன்னார் யானை வாகனத்திலும் உலா வந்த காட்சி...

ஏழாம் நாள் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி...

எட்டாம் நாள் ஶ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும் ஶ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா...


ஒன்பதாம் நாள் ஶ்ரீஆண்டாள் திருத்தேர் பவனி...Trending Articles

Sponsored