மந்த்ராலய மகானின் பிருந்தாவன பிரவேசம்!Sponsored1671-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வியாழக்கிழமை...

மந்த்ராலயத்தில் கூடியிருந்த பக்தர்களின் மனங்களை அழுத்தியிருந்த சோகம் அவர்களின் முகங்களிலும் பிரதிபலித்தது. திவான் வெங்கண்ணா பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். மூலராமர் பூஜைக்கான மலர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. மூலராமர் பூஜை முடிந்தவுடன் மகான் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன பிரவேசம் செய்யத் திருவுள்ளம் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே அனைவர் முகங்களிலும் சோகத்தின் பிரதிபலிப்பு. இனி நம் மகானை எப்போது காணப்போகிறோமோ என்ற ஏக்கம்...

Sponsored


அன்று அதிகாலையிலேயே துங்கபத்ரா நதியில் ஸ்நானம் செய்துவிட்டு பூஜைக்குத் தயாராகிவிட்டார். பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் சிரத்தையுடன் செய்திருந்தார் யோகீந்திர தீர்த்தர். கூடியிருந்த பக்தர்களுக்குத் தரிசனம் தந்த மகான், அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களிடையே அருளுரை நிகழ்த்தினார்.

Sponsored


``உங்கள் முகங்களில் கவலை தெரிகிறது. யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் கவலைகளை நான் போக்குவேன். என்னுடைய பூதவுடல் மறைந்துவிட்டாலும், நான் உங்களுக்கு அருகிலேயே இருப்பேன். உண்மையான பக்தியுடன் என்னைக் காணவரும் பக்தர்களுக்கு என்னுடைய அருள் பூரணமாகக் கிடைக்கும். மாஞ்சாலம் வரமுடியாவிட்டாலும், இருந்த இடத்திலிருந்தே என்னை வழிபட்டாலும் அவர்களுடைய துன்பங்களைப் போக்குவேன்'' என்று ஆசியுரை வழங்கிவிட்டு, மூலராமரின் பூஜையில் ஈடுபட்டார்.

பூஜைகள் முடிந்த பிறகு, மங்கள வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் ஒலிக்க, பிருந்தாவனத்துக்கு அருகில் சென்றார். யோக முத்திரையுடன் பிருந்தாவனத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த மகான், பிரம்ம தண்டத்தைத் தோளில் சாய்த்து வைத்தார். கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு, துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவருடைய திருக்கரத்தில் இருந்த துளசி மாலை நழுவிக் கீழே விழுந்தது. ஆம். அவர் ஜீவ சமாதி அடைந்துவிட்டார். இன்றுடன் 347 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்றும் தம்மை வழிபடும் பக்தர்களின் இன்னல்கள் அனைத்தையும் அகற்றி, மகிழ்ச்சியான வாழ்க்கையை அருள்கிறார் மந்த்ராலய மகான்.Trending Articles

Sponsored