சித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்!Sponsoredதாமிரபரணிக் கரையில் அமைந்திருக்கும் கடையனோடைக் கிராமத்தில் வள்ளிமுத்து - நாராயணவடிவு தம்பதி தவமிருந்து பெற்றப் பிள்ளை சுப்பையா. படிக்கும் காலத்திலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அடிக்கடி நெல்லைப் பகுதியில் இருந்த நவ திருப்பதிகளுக்கும் சென்று தரிசித்து வழிபட்டு வருவது வழக்கம்.

அப்படிச் செல்லும்போது சில நாள்களில் அங்கேயே தங்கிவிடுவார். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர், மேல்நாட்டில் படிக்க விரும்பினார். ஆனால், அதற்கு தந்தை உடன்படவில்லை என்பதால் வெளிநாடு செல்லும் விருப்பத்தைக் கைவிட்டார். ஆன்மிகத் தலங்களுக்கும் சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று வழிபடத் தொடங்கினார். தொடர்ந்து நான்கு வருடங்கள் அன்றைய கல்கத்தாவில் தங்கி, சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும் சம்ஸ்கிருத மந்திரங்களையும் சேர்த்து பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடல்நலனுக்கு உகந்ததாக இல்லாததால், சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார். சொத்துகளில் தனக்கு உரிய பங்கை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார்.

Sponsored


Sponsored


வடலூர் வள்ளலார் மடத்திலும் 3 வருடம் தங்கினார். வள்ளலாரின் புகழைப் பரப்பியபடி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்துக்கு வந்தார். அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையிலுள்ள குகையில் அமர்ந்தார். ஒன்பது வருடங்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார். தான் ஜீவசமாதி அடைவதற்கான நாளைக் குறித்துவிட்டு, அங்கிருந்த அன்பர்களிடம் தனது ஆன்மா உடலை விட்டு வெளியேறிவிட்டால், உடலை ஒரு குழியில் இட்டு கல்லைக் கொண்டு மூடிவிடும்படியும், 40 நாள்கள் சென்று திறந்து பார்க்கும்படியும், உடல் அழுகியோ அல்லது சாய்ந்தோ இருந்தால், மண்ணையிட்டு மூடிவிடுங்கள். வைத்த நிலையிலேயே இருந்தால், 10 மாதம் கழித்து மறுபடி ஒருமுறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை வைத்து மூடிவிடும்படியும் கூறினார்.

1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். 

இதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்திருக்கிறார். சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். நாள்தோறும் அன்னதானமும் நடைபெறும் சுப்பையா சுவாமிகளின் கோயிலுக்கு நாளை 23.8.18 அன்று காலை 8 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. சுப்பையா சுவாமிகளின் பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.Trending Articles

Sponsored