இந்த வார ராசி பலன் செப்டம்பர் 3 முதல் 9 வரை



Sponsored



மேஷம்: பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். 

அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று - வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

Sponsored


கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

Sponsored


மாணவ மாணவியர்க்கு மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டாலும், அவற்றை ஒதுக்கித் தள்ளி, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

அசுவினி: 4, 5, 6, 9; பரணி: 3, 5, 6, 7; கார்த்திகை: 3, 4, 6, 7, 8 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 9

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

அசுவினி: 3, 7, 8; பரணி: 4, 8, 9; கார்த்திகை: 5, 9 

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

ரிஷபம்: எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தினருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவியும் உற்சாகமும் உண்டாகும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், அதன் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தாமதம் செய்யக்கூடாது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மாதாந்திரத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.\

அதிர்ஷ்ட நாள்கள்: 

கார்த்திகை: 3, 4, 6, 7, 8 ; ரோகிணி: 3, 4, 5, 7, 8, 9; மிருகசீரிடம்: 4, 5, 6, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

கார்த்திகை: 5, 9; ரோகிணி: 6; மிருகசீரிடம்: 3, 7 

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜைறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    

மிதுனம்: பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் என்பதால் மனதில் சலனம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனச் சோர்வு ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அறிவுரை உங்கள் சோர்வை அகற்றும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

மிருகசீரிடம்: 4, 5, 6, 8, 9; திருவாதிரை: 5, 6, 7, 9; புனர்பூசம்: 3, 6, 7, 8 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மிருகசீரிடம்: 3, 7; திருவாதிரை: 3, 4, 8; புனர்பூசம்: 4, 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

கடகம்: பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிப்புக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.

கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நாள்கள்: 

புனர்பூசம்: 3, 6, 7, 8 ; பூசம்: 3, 4, 7, 8, 9; ஆயில்யம்: 3, 4, 5, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

புனர்பூசம்: 4, 5, 9; பூசம்: 5, 6; ஆயில்யம்: 6, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும். 

  பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
   மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
   மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
   அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

சிம்மம்:வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனதில் குழப்பமான நிலை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள்  வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். நண்பர்களுடன் பொழுது போக்குவதை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனமாக ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.

அதிர்ஷ்ட நாள்கள்: 

மகம்: 4, 5, 6, 9; பூரம்: 3, 5, 6, 7; உத்திரம்: 3, 4, 6, 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மகம்: 3, 7, 8; பூரம்: 4, 8, 9; உத்திரம்: 5, 9 

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை 

கன்னி: பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளையின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே காணப்படும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். சிலருக்குக் கல்வி தொடர்பான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

 உத்திரம்: 3, 4, 6, 7, 8; அஸ்தம்: 3, 4, 5, 7, 8, 9; சித்திரை: 4, 5, 6, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

உத்திரம்: 5, 9 ; அஸ்தம்: 6; சித்திரை: 3, 7 

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

துலாம்: பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
சித்திரை: 4, 5, 6, 8, 9; சுவாதி: 5, 6, 7, 9; விசாகம்: 3, 6, 7, 8 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

சித்திரை: 3, 7 ; சுவாதி: 3, 4, 8; விசாகம்: 4, 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு சிறிய அளவில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். 

மாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

விசாகம்: 3, 6, 7, 8; அனுஷம்: 3, 4, 7, 8, 9; கேட்டை: 3, 4, 5, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

விசாகம்: 4, 5, 9; அனுஷம்: 5, 6; கேட்டை: 6, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

தனுசு: வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டு பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக ஊதிய உயர்வு போன்ற சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.

மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், படிப்பில் கவனம் குறையக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்:

மூலம்: 4, 5, 6, 9; பூராடம்: 3, 5, 6, 7; உத்திராடம்: 3, 4, 6, 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

மூலம்: 3, 7, 8; பூராடம்: 4, 8, 9; உத்திராடம்: 5, 9 

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 

மகரம்: பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் உண்டாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. 

மாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

உத்திராடம்: 3, 4, 6, 7, 8; திருவோணம்: 3, 4, 5, 7, 8, 9; அவிட்டம்: 4, 5, 6, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

உத்திராடம்: 5, 9; திருவோணம்: 6; அவிட்டம்: 3, 7 

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

கும்பம்: பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிலருக்கு சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 

அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதுமான பண வரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

அவிட்டம்: 4, 5, 6, 8, 9; சதயம்: 5, 6, 7, 9; பூரட்டாதி: 3, 6, 7, 8 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

அவிட்டம்: 3, 7; சதயம்: 3, 4, 8; பூரட்டாதி: 4, 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன        
    அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்     
    பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே

மீனம்: பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் பற்று - வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டி வரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 

பூரட்டாதி: 3, 6, 7, 8; உத்திரட்டாதி: 3, 4, 7, 8, 9; ரேவதி: 3, 4, 5, 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்கவேண்டிய நாள்கள்:

பூரட்டாதி: 4, 5, 9; உத்திரட்டாதி: 5, 6; ரேவதி: 6, 7

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகருளானே.



Trending Articles

Sponsored