திருப்பதியில் முதலில் யாரை தரிசனம் செய்ய வேண்டும்?Sponsoredதிருமலையில் திருப்பதி வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு, நாம் தரிசிக்கவேண்டிய பிரதான தெய்வம் அருள்மிகு வராக சுவாமிதான்.

திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். பெருமாளை தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபட வேண்டும். அவர்தான் அருள்மிகு வராக சுவாமி. சீனிவாச பெருமாள் திருமலையில் எழுந்தருள இடம் கொடுத்தவர். அதன் காரணமாகவே, மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் பூஜை, நைவேத்தியம் முதலியவை முதலில் வராக சுவாமிக்கே நடைபெறும். அதன் பிறகே வேங்கடேச பெருமாளுக்கு பூஜை, நைவேத்தியம் நடைபெறும். இந்த நடைமுறை இன்று வரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஶ்ரீவராகசுவாமியை வழிபட்ட பிறகுதான் வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். வராக மூர்த்தி கோயில், திருக்குளத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. ஶ்ரீவராகசுவாமி ஜயந்தி நாளை மறுதினம் 12-ம் தேதி புதன்கிழமை திருமலையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்கள், ஆராதனைகள், நடைபெறுகின்றன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored