கருடக்கொடியேற்றத்துடன் நாளைத் தொடங்குகிறது... திருப்பதி பிரம்மோற்சவம்! #VikatanPhotoStory



திருமலை திருப்பதியில் நாளை 13 - ம்  தேதி மாலை கருடக் கொடி யேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் 9 நாள்கள் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஐந்தாம் நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்ச்சிக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

Sponsored


பிரம்மோற்சவத்தையொட்டி வைகாநஸ ஆகமமுறைப்படி வேங்கடேச பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப் பட்டு நான்கு மாடவீதிகளில் மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்.

Sponsored


பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

Sponsored


13-9-18 -  மாலை 4.30 மணிக்கு கருடக் கொடியேற்றம் 

13-9-18 -  இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

14-9-18 - காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா

14-9-18 - இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

15-9-18 - காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா

 15-9-18 -இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி

16-9-18 - காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா

16-9-18 - இரவு 9  மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

17-9-18 - காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா 

17-9-18 - இரவு 7 மணிக்கு கருட சேவை

18-9-18 - காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா

 18-9-18 - மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம்

18-9-18 - இரவு யானை வாகன வீதிஉலா

19-9-18 - காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா

19-9-18 - இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

20-9-18 - காலை 7 மணிக்கு தேரோட்டம்

20-9-18 -இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா

21-9-18 - காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் 

21-9-18 - இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவ விழாவின்போது பகலில் வழக்கம்போல் காலை 9 மணியிலிருந்து பகல் 11 மணிவரை நான்கு மாட வீதிகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், இரவுப்பொழுதில் வாகன வீதி உலா நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கமாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் வீதி உலா நிகழ்ச்சி ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து!

பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருப்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விழா நடைபெறும் நாள்களில், அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கி வரும் சிறப்பு தரிசன சலுகைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தவிர வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்படுகிறது.

நாளை நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமாளுக்கு பட்டுவஸ்திரம் சமர்ப்பிப்பதற்காக எடுத்து வருகிறார்.  

9 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தடையின்றி சிரமமில்லாமல் நடப்பதற்காக 3000 காவலர்கள், திருமலை சேவையில் ஈடுபடும் 3000 தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் ஆயிரம் சாரணர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை நேரலையாகக் காணும் விதமாக 31 இடங்களில்  அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

விழாநாள்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், 17 -ம் தேதி நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின் போது இரு சக்கர வாகனங்களைக்கூட அனுமதிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

படங்கள் உதவி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 



Trending Articles

Sponsored