தெய்வ கடாட்சம் தரும் ஜாதக அமைப்பு எது?



Sponsored




'ஜோதிட கலாரத்னா' குமரன் தேவசேனா


இறைவனை வணங்கிட மனிதப் பிறவியும் வேண்டும் இந்த மாநிலத்தே  என்று பாடி இருக்கிறார் நாவுக்கரசர் பெருமான். அப்படி மனிதப் பிறவியை அடைந்த எல்லோருக்கும் தெய்வ நம்பிக்கை இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒருவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பதற்கும், அவருக்கு தெய்வ கடாட்சம் கிடைப்பதற்கும் அவருடைய பூர்வ புண்ணியத்தின்படி ஜாதகத்தில் கிரக நிலைகள் அமைந்திருக்கவேண்டும்.

Sponsored



ஒருவருக்கு ஆன்மிக ஈடுபாடோ அல்லது தெய்வகடாட்சமோ பரிபூரணமாக அமைவதற்கு, அவரது ஜாதகத்தில் 5 மற்றும் 9-ஆம் பாவங்களும், குரு, சனி, கேது ஆகிய கிரகங்களும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம்.
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் இடம்  பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 9-ஆம் இடம் பாக்கியஸ்தானம் அல்லது தர்மஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் மற்றும் பூர்வஜென்மத்தில் அவர் செய்த பாவ-புண்ணியம் போன்றவற்றை 5-ஆம் பாவமும், அவரது ஆன்மிக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப்போகும் நற்காரியம், பெறப்போகும் பாக்கியங்கள், ஆலயப் பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் ஆகியவற்றை 9-ஆம் பாவமும் குறிக்கின்றன.

Sponsored


இப்படியான 5 மற்றும் 9-ஆம் பாவங்கள் சுப கிரகங்களின் வீடுகளாகி, அந்த பாவங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்தோ அல்லது சுப கிரகங்களின் பார்வை கிடைத்தோ பலம் பெறுமாயின், அந்த ஜாதகர் இந்த பூமியில் பரம்பொருளின் கருணையைப் பெற்றவராக இருப்பார் என்பது ஜோதிட விதி.


சுப கிரகமான குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் வலிமை பெற்று லக்னத்தையோ, ராசியையோ அல்லது 5, 9-ஆம் பாவங்களையோ பார்வையிட்டால், அந்த நபர் நேர்மையாளராகவும், ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும், பெரியோரால் பாராட்டப்படுபவராகவும், ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுபவராகவும் இருப்பார்.


குருபகவான் ஞானிகளிடம் நெருக்கம், அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு மற்றும் மதிப்புக்கு உரிய பெரியோர்களின் அறிமுகம்

வாய்ப்பதைக் குறிக்கும் கிரகம். ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் பெற்று வலிமையோடு இருக்கும் நிலையில், அந்த ஜாதகருக்கு நேர்மையான வழிகளில் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.


சுப கிரகமான குருவைப் போலவே பாப கிரகமான சனியும் ஆன்மிக உணர்வுகளுக்கு காரணமான கிரகம்தான். அமானுஷ்ய சக்திகள், சித்து வேலைகள், யட்சினி உபாசனை, மாந்த்ரீகம், கிராம தேவதைகளை வணங்குதல், அருள்வாக்கு மற்றும் குறி சொல்லுதல் போன்றவைகளுக்கு சனி காரணம் ஆவார்.


ஒருவரது ஜாதகத்தில் சனி சுப பலமோ அல்லது சூட்சும வலுவோ பெற்று 5, 9-ஆம் இடங்களைப் பார்க்காமல், வேறு வகையில் தொடர்பு கொள்ளும் நிலையில், மேலே நான் சொன்ன பலன்களைச் செய்வார். மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி போன்றவற்றிலும், சில வகையான முடிவற்ற ஆன்மிக தேடல்களில் ஆர்வத்தை அளிப்பவரும் சனிபகவான்தான். குறிப்பாக, 'இறப்புக்குப் பின் மனிதனின் நிலை என்ன?’ என்பது போன்ற சிந்தனைகளுக்கு சுப பலம் அல்லது சூட்சும வலு பெற்ற சனிபகவான் காரணமாக அமைவார்.


சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது கேதுவுடன் இணைந்தோ அல்லது குரு பகவானின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது போன்ற அமைப்பைக் குறிக்கும்.



Trending Articles

Sponsored