காளி, சிவலிங்கம், ஐயப்பன் படங்களை வீட்டில் வைக்கலாமா?Sponsoredசிவலிங்கம், காளி, ஆஞ்சநேயர், ஐயப்பன், மற்றும் துர்கை போன்ற தெய்வங்களின்  படங்களை வீட்டின்  பூஜையறையில், வைத்து வழிபடலாமா? என்பது பற்றி   ஆன்மிக  அருளாளர் குமார சிவாச்சார்யாரிடம் கேட்டோம். 

வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய  வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. ஆனால், நாம் தினந்தோறும்

வழிபடும் சுவாமி படங்களில், என்ன மாதிரியான படங்களை வைத்து வழிபடலாம் என்பது பற்றி பார்ப்போம். சுவாமி படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில், சில விதிமுறைகள் உள்ளன.

Sponsored


நாம் பிரார்த்தனைக்காக யாத்திரை செல்லும் இடங்களில் உள்ள படங்களை எல்லாம்   வாங்கி வந்து வழிபடக்கூடாது. அப்படிச் செய்தால், நமக்கு முழுமையான பலன்கள் கிடைக்காது. வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.
தெய்வங்களில் சாத்விக தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் என  இரண்டு வகைகள் உள்ளன. சாத்விக தெய்வங்களை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது. வாழ்வில் குழப்பங்களை தவிர்த்து, இறை வழிபாடு தழைக்க வேண்டுமானால், முருகன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி போன்ற படங்களை வைத்து வழிபடலாம். அவரவர்களின் குலதெய்வ படத்தை கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.

Sponsored


அவரவர்களுக்கு உரிய  இஷ்ட தெய்வத்தின் படத்தை வாங்கி வந்து வைத்து வழிபடுவது என்பது, நமது பிரார்த்தனையிலும், நமது வைராக்கியத்திலும், லட்சியத்திலும் துணை நிற்கும். இது மிகப் பெரிய அளவில்  நன்மை தரும். வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில், நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றி நம் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க உதவும். அவ்வப்போது நாம் வைக்கும்  நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, நம்மை காப்பாற்றும் தெய்வம், நம்முடைய  இஷ்ட தெய்வமே. குல தெய்வத்துக்கு அடுத்தபடியாக நமக்கு  வாழ்க்கை வளங்களை வாரி வழங்கி அருள்பாலிக்கும் தெய்வம் இஷ்டதெய்வமே.

உக்கிர தெய்வங்களான காளி, பிரத்யங்கிரா தேவி, துர்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குக் காரணம் என்னவென்றால், அவைகளுக்கு உரிய பூஜை மற்றும் அனுஷ்டான முறைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 

துர்கை படம் என்றால், 16 வகையான துர்கை படங்கள் உள்ளன. அவற்றில், 'சாந்த துர்கை' படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம். ஐயப்பன், ஆஞ்சநேயர் போன்ற  படங்களை விரத காலங்களில் பயன்படுத்தி விட்டு பின்னர் பீரோவிலோ பெட்டியிலோ வைத்து பத்திரப்படுத்தலாம்.  

பூஜை அறையில் சுவாமி படங்களுடன், பித்ருக்களின் அதாவது  அமரரான தாய் தந்தையர், தாத்தா பாட்டி படங்களை வைத்து வணங்கக்கூடாது. அவர்களது படங்களை, வீட்டில் உள்ள ஹாலில் அல்லது படிக்கும் அறையில் வைத்து வணங்கலாம்.

எஸ்.கதிரேசன் Trending Articles

Sponsored