உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள் பரிகாரங்கள்! #AstrologySponsored27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பூரம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை    :  தேவர்களில் ஒருவரும், பத்ரிநாராயணனின் அம்சமான பகன்.
வடிவம் : கட்டில் கால்களைப் போன்ற வடிவத்தில் இரண்டு பிரதான நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டம்.
எழுத்துகள்  : டே, டோ, ப, பி

Sponsored


உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பொதுவான பலன்கள் :

Sponsored


சூரிய பகவானின் அம்சத்தில் வந்த இரண்டாவது நட்சத்திரம். உத்திரத்தில் பிள்ளை பெற்றால், 'உறியில் சோறு' என்பார்கள். கட்டடத்துக்கு

வலுசேர்க்கும் உத்திரத்தைப் போல பெற்றோருக்கு உறுதுணையாக எப்போதும் இருப்பார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிள்ளையிருந்தால், வீடு சுபிட்சம் அடையும் என்று முன்னோர்கள் கூறினர். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், 2, 3, 4 - ம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்திருக்கின்றன. நட்சத்திர மாலை,  கம்பீரமாக நடப்பவராகவும் அருகிலிருப்பவர்களை, பெண்களை நேசிப்பவராகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் பெருஞ் செல்வம் சேரும் என்றும் உங்களைப் பற்றிக் கூறுகிறது.

ஜாதக அலங்காரம், இதமாகப் பேசுவார்கள்; முன் கை பலவானாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். முன்கோபியாகவும் இருப்பார்கள். 

பிருகத் ஜாதகம், சத்ருக்களை வெல்பவராகவும், வேத சாஸ்திரம் அறிந்தவர்களாவும் இருப்பார்கள். மனோ சக்தி வாய்ந்தவர்களாகவும் உண்மை பேசுபவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.

வல்லவனுக்கு வல்லவனாகவும் கல்விமானாகவும் விளங்குவார்கள்.  சிலர் கவி, காவிய ஆராய்ச்சி செய்பவர்களாக இருப்பார்கள். சில செயல்களைத் தன்னால் மட்டும்தான் செய்ய முடியும், வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்று எண்ணுவார்கள். 

வசீகரமான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். முகத்திலும் மார்பிலும் மச்சமிருக்கும். நடையில் நளினமும் அழகும் இருக்கும்.

 

பூர்வீக சொத்துகளைப் பெற்றிருப்பினும் சொந்த முயற்சியால் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை சேகரிப்பார்கள். கால்நடைகளையும் கறவை மாடுகளையும் வீட்டில் வளர்ப்பார்கள்.நயவஞ்சகம் இவர்களுக்குத் தெரியாது. 

பெண் நண்பர்களை கவர்வதற்காக இனிமையாகப் பேசுவார்கள். குறைகளைக் கண்டால் யோசிக்காமல் முகத்தில் அடித்தாற் போல் பேசி விடுவார்கள். உண்மை பேசக்கூடியவர்கள். எந்த சூழ்நிலையிலும் தடம் மாற மாட்டார்கள்.

'அடிக்கடி பசியுடையவர்களாக இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக உண்பார்கள். கலையில் ஆர்வம் உள்ளவர்களாகவும் மிகச் சிறந்த சிந்தனாவாதியாகவும் திகழ்வார்கள்' என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. 

அனுபவ அறிவு அதிகம் உடையவர்கள். இளமையில் வறுமைக் கோட்டில் வாழ்ந்தாலும், முதுமையில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று வாழ்வார்கள். 

தெய்வத்தைப் பற்றிப் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். அனல் பறக்கும்  பேச்சால் எதிரிகள் தவிடுபொடியாவார்கள். முதல் முப்பது வயதைக் காட்டிலும் இரண்டாவது முப்பதில் அதிக செல்வம், செல்வாக்கு ஆகியவை இவர்களை வந்தடையும்.

எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். சிக்கனவாதிகளான இவர்கள், சுயமதிப்பும் கண்ணியமும் உடையவர்களாக இருப்பார்கள்.

தன்னலத்தைக் கருதாது பிறர் நலனுக்குப் பாடுபடுவார்கள். பெரிய வியாபாரம் அல்லது பெரிய நிறுவனம் அமைத்து அதில் பல பணியாட்களை அமர்த்தி அவர்களுக்கு மாதா மாதம் நிறைய ஊதியம் தரக்கூடிய எஜமானர்களாக இருப்பார்கள். ஜோதிடக் கலையில் ஆர்வமும் சமயம், சாஸ்திரம், வேதம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

உத்திரம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

உத்திரம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

காஞ்சிபுரத்துக்கு மேற்கே இருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரரை வணங்குதல் நலம். 

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

வேலூருக்கு மேற்கே இருக்கும் விரிஞ்சிபுரத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ வழித்துணைநாதரை வணங்குதல் நலம்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் பரிகாரம்:

ஸ்ரீ வைகுண்டத்துக்கு அருகிலுள்ள திருக்குளந்தை அதாவது பெருங்குளம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லித் தாயார், ஸ்ரீ அலமேலுமங்கைத் தாயார் உடனுறை ஸ்ரீ சோரநாதப் பெருமானை வணங்குதல் நலம். 

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்

சென்னையில் உள்ள திருவலிதாயத்தில் (பாடி) ஸ்ரீ தாயம்மை உடனுறை ஸ்ரீ வல்லீசர் எனும் திருவலிதாயநாதரை வணங்குதல் நலம்.

மற்ற நட்சத்திரங்களின் குணநலன்கள்Trending Articles

Sponsored