தினம் தினம் திருநாளே! - தினப்பலன்



தினப்பலன்

'ஜோதிடஸ்ரீ' முருகப்ரியன்

Sponsored


Sponsored


மேஷம்:    உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது  அவசியம்.  பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை  நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

சிம்மம்: தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.     

கன்னி: இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

துலாம்: காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.  

விருச்சிகம்: இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.  அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

தனுசு: காரியங்கள் அனுகூலம் உண்டாகும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும். 

மகரம்: காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும்.  பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும்.

கும்பம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.  நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்: இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.  பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.



Trending Articles

Sponsored