தினம் தினம் திருநாளே! - தினப் பலன் -ஆகஸ்ட் - 6 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்




தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 6
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

Sponsored


மேஷம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். 

Sponsored


ரிஷபம்:காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும்.  பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

Sponsored


மிதுனம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள்.  பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.  வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.

சிம்மம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். 
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்:  சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். 
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். 

தனுசு: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:  இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.  தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். 
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். 
 



Trending Articles

Sponsored