தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் -13 பஞ்சாங்கக் குறிப்புகளுடன்




தினம் தினம் திருநாளே!
தினப் பலன்
ஆகஸ்ட் - 13
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

Sponsored


மேஷம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

Sponsored


ரிஷபம்: அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தரும். உறவினர்களால் உதவி உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும்.

Sponsored


மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உறவினர்களின்  வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.

கடகம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்: மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சுபச் செய்திகள் வரும்.

கன்னி: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

துலாம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

தனுசு: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. பழைய கடன் பாக்கி இன்று கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

மகரம்: உற்சாகமான நாள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம்.  கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை  முடித்துக் கொள்வீர்கள். 
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்.

கும்பம்: அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்: இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.



Trending Articles

Sponsored