தினம் தினம் திருநாளே! - தினப் பலன்-ஆகஸ்ட் - 16 பஞ்சாங்கக் குறிப்புகளுடன்



Sponsored



தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 16
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவும் உண்டாகும்.
அசுவினி நட்சத்திரத்தில் வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்தி வரும்.

Sponsored


ரிஷபம்: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச்செய்தியும் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

Sponsored


மிதுனம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. 

சிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். 
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பயணத்தின்  போது கவனம் அவசியம். பழைய கடன் பாக்கி இன்று கிடைக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரிய அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் வழியில் பண உதவி கிடைக்கும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  தந்தை வழியில் நன்மை ஏற்படும்..

தனுசு: இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். 
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்: அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலை அதிகரிப்பதன் காரணமாக நீங்கள் செய்ய நினைத்த சில சொந்த வேலைகளைத் தள்ளிப்போட நேரும். உறவினர்களின் உதவி திருப்தி அளிக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய  முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். 
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை ஏற்படும்.

மீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். 
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.



Trending Articles

Sponsored