தினம் தினம் திருநாளே! - தினப் பலன் - ஆகஸ்ட் - 17 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்



தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 17 - வியாழக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

Sponsored


மேஷம்: உற்சாகமான நாள். மற்றவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். 
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

Sponsored


ரிஷபம்: காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். 
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

Sponsored


மிதுனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். எதிர்பார்க்கும் விஷயங்கள் சாதகமாக முடியும். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் ஆலய தரிசனம் செய்வீர்கள்.

கடகம்:  உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். 

சிம்மம்:  காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

கன்னி:   முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்:  காலைப் பொழுது இதமாக விடியும். பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு: இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும்.  உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

மகரம்: காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். 
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

கும்பம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.  நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மீனம்:   இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். 
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.



Trending Articles

Sponsored