அழகன் முருகனின் புகழைப்பாடும் பன்னிரு திருமுறைகள் எவையெவை?Sponsoredசிவபெருமானை வழிபடும் சைவ சமயத்தில், சிவபெருமானின் புகழையும் சிவனடியார்களின் மகிமைகளையும் போற்றும் நூல்கள் பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. தேவாரம், திருவாசகம் முதல் பெரிய புராணம் வரை உள்ள நூல்கள் பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. அதேபோல் முருகப் பெருமானுக்கும் ‘முருகவேள் பன்னிரு திருமுறைகள்’ உள்ளன.

அந்தத் திருமுறைகள்...

Sponsored


தணிகைமணி செங்கல்வராய பிள்ளை என்பவர்தான் சிவனைப்போலவே அவரது திருமகனின் புகழைப்பாடும் நூல்களைத் தொகுத்து திருமுறைகளாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி முருகனின் புகழ் பாடும் நூல்களை திரட்டத் தொடங்கினர். அதன்படி,

Sponsored


* திருப்பரங்குன்றம் திருப்புகழ் என்னும் நூல் முதல் திருமுறை

* திருச்செந்தூர் திருப்புகழ் என்னும் நூல் இரண்டாநம் திருமுறை

* திருவாவினன்குடி திருப்புகழ் என்னும் நூல் மூன்றாம் திருமுறை

* சுவாமிமலை திருப்புகழ் என்னும் நூல் நான்காம் திருமுறை

* குன்றுதோறாடல் திருப்புகழ் என்னும் நூல் ஐந்தாம் திருமுறை

* பழமுதிர்சோலை திருப்புகழ் என்னும் நூல் ஆறாம் திருமுறை

* பொதுத் திருப்புகழ் பாடல்கள் என்னும் நூல் ஏழாம் திருமுறை

* கந்தரலங்காரம் - கந்தரந்தாதி என்னும் நூற்கள் எட்டாம் திருமுறை

* திருவகுப்பு என்னும் நூல் ஒன்பதாம் திருமுறை

* கந்தரனுபூதி என்னும் நூல் பத்தாம் திருமுறை

* நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்முதலானவர்கள் முருகனைப் பற்றி பாடிய பாடல்கள் - பதினோராம் திருமுறை என வகைப்படுத்தி முருகனுக்கு அர்ப்பணித்தார்.

எனினும் சைவ சமயத்தைப்போல பன்னிரு திருமுறைகள் கிடைக்காததை எண்ணிக் கலங்கினார். அதுவும் சைவத்தின் 12-ம் திருமுறையான திருத்தொண்டர்கள் பெருமை கூறும் பெரிய புராணத்தைப்போல முருகனின் அடியார்களின் பெருமை சொல்லும் விதமாக ஒரு புராணம் இல்லையே என்று வருந்தினார். 12 திருமுறைகள் தொகுக்கப்பட்டால்தான் தனது முருகப்பணி சிறக்கும் என்று எண்ணினார். அதனால், முருகனை எண்ணி மனமுருகி வேண்டினார். 12-ம் திருமுறையை அளிக்கவும், தனது அடியார்களின் பெருமையை கூறவும் முருகப்பெருமான் விரும்பினார். அதன்படி தணிகைமணி செங்கல்வராய பிள்ளைக்கு சுந்தரர் உலா என்ற புத்தகத்தை கிடைக்கச் செய்தார். அந்தப் புத்தகத்தின் கருத்துக்களில், அழகிய தமிழ் நடையில் சொக்கிப்போன பிள்ளையவர்கள் அதை எழுதிய புலவரைத் தேடி அலைந்தார்.

இறுதியாக முருகன் அருளால் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் என்ற புலவர்தான் அதை எழுதியவர் என்று கண்டறிந்து அவரிடம் தனது ஆசையை கூறினார். 11 திருமுறைகளை தொகுத்த அவருக்கு 12-ம் திருமுறையாக முருகனடியார்கள் வரலாறு என்ற சேய்த்தொண்டர் புராணம் என்ற நூலை எழுத சொக்கலிங்கனார் ஒப்புக்கொண்டார். பன்னிரண்டாம் சைவத் திருமுறையை சேக்கிழார் நாடெங்கும் சுற்றி சைவ அடியார்களின் தகவல்களை அறிந்து ஒரே ஆண்டில் எழுதியதைப்போல, சொக்கலிங்கனாரும் முருகன் அருளால் ஒரே ஆண்டில் முருகப்பெருமானின் 12-ம் திருமுறையை எழுதிக்கொடுத்தார். அதன்படி முருகனடியார்கள் வரலாறு என்ற சேய்த்தொண்டர் புராணம் என்ற நூல் முருகப்பெருமானின் 12-ம் திருமுறையானது. 12 திருமுறைகள் நிறைவு பெற்றதை எண்ணி மகிழ்ந்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை முருகப்பெருமானின் எல்லையில்லாத கருணையை எண்ணி மகிழ்ந்தார். இப்படித்தான் சிவனின் புகழ் பாடும் சைவத்திருமுறைகளைப் போல கந்தனின் புகழ் பாடும் 12 திருமுறைகள் உருவானது. இன்றும் முருகனை முக்கிய கடவுளாக எண்ணி வழிபடும் அடியார்களின் வீட்டில் இந்த திருமுறைகள் வணங்கப்பட்டு வருகின்றன.Trending Articles

Sponsored