தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கான ராசிபலன் பஞ்சாங்கக் குறிப்புகளுடன்Sponsored
தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 19 
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

Sponsored


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி  உண்டாகும்.

Sponsored


ரிஷபம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

மிதுனம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கடகம்:  இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டு. எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:    காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

துலாம்:  இன்று நீங்கள் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் காரிய அனுகூலம் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தனுசு:  உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும்.  பிற்பகலுக்குமேல்  உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.
 Trending Articles

Sponsored