நந்திபெருமான் காதில் ரகசிய வேண்டுதல்கள்... தஞ்சை பெரியகோயில் பிரமோற்சவக் கொண்டாட்டம்!Sponsoredதஞ்சை பெரியகோயில் என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது அங்கு அமைந்துள்ள மகாநந்தி. ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது இதன் கூடுதல் சிறப்பு. இந்த நந்திக்குப் பிரதோஷ  நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். சனிக்கிழமை வரும் சனி பிரதோஷம் நாளில் இன்னும் கூடுதல் சிறப்போடு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதை காண ஆயிரக்கணக்கான  மக்கள் கூடுவார்கள். மாதம்தோறும் பிரதோஷம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அதிலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைந்துள்ள பிரமாண்ட நந்திக்கு செய்யப்படும் பிரதோஷ வழிபாடு இன்னும் சிறப்பானது. இந்த சிறப்பான பிரதோஷ அபிஷேகத்தை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பலரும் கூடுவார்கள். 

இந்த மகா நந்திக்கு அருகிலும், பெரிய நாயகி அம்மன் சந்நிதிக்கு எதிரேவும் சிறிய அளவிலான நந்தி உள்ளது. இதன் காதில் வேண்டுதல்களைச் சொன்னால் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. பிரதோஷ தினத்தில் மட்டும் இல்லாது எல்லா நாட்களிலும் நந்தியை வழிபட வருபவர்கள் சிறிய நந்தியின் காதில் குறைகளையும் வேண்டுதல்களையும் சொல்லி வணங்கி சொல்கிறார்கள்.

Sponsored


இன்று சனி பிரதோஷம். தஞ்சை பெரிய கோவிலுக்கு காலையில் இருந்தே ஏராளனமான பக்தர்கள் வந்து நந்தியையும், பெருவுடையாரையும் வணங்கிச் சென்றார்கள். அதோடு சிறிய நந்தியிடம் தங்கள் குறைகளைக் கூறிவிட்டு சென்றனர். கும்பகோணத்தில் இருந்து வந்த மாணவி ஒருவர் நந்தியின் காதில் தன் கோரிக்கையைச் சொல்லி மனமுருகி வேண்ட ஆரம்பித்தார். நாம்,  'நந்தியிடம் என்ன கோரிக்கை விடுத்தீர்கள்' என கேட்டோம். ‘எனக்கு படிப்புல கொஞ்சம் ஆர்வம் குறையுது. நல்லா படித்து நல்ல வேலைக்கு போகணும் அதைத்தான்  நந்தியின் காதில் சொல்லி வேண்டினேன்...' என்றார்.

Sponsored


‘போதிய மழை இல்லை. எங்கு பார்த்தாலும்  தண்ணீர் தட்டுப்பாடு. விவசாய நிலங்கள் எல்லாம் வறண்டு வெடித்து கிடக்கின்றன. முப்போகம் விளைந்த பூமி இன்றைக்கு ஒரு போக விளைச்சலுக்கே வழியில்லாமல் கிடக்கிறது. இவை எல்லாம் நீங்க வேண்டும். இந்த தஞ்சை மண் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க செழிக்க வேண்டும்' என நந்தியிடம் வேண்டியதாகச் சொன்னார் ஒரு விவசாயி.  

‘எங்க அம்மா, அப்பா நோய் நொடியில்லாம நல்லா இருக்கணும். நானும் நல்லா படிக்கணும்' என சிறுவன் ஒருவன்  நந்தியின் காதில் சத்தமாக சொல்ல, ‘நந்திக்கு மட்டும் சொல்லுடா’ என செல்லமாக அதட்டினார் அவரின் அம்மா.

‘சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால்  நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும்  இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய  நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும்  என்பதுதான்  இதன்  கூடுதல் சிறப்பு” என்று கோயில் தரப்பில் தெரிவிக்கிறார்கள். சனி மகாபிரதோஷ தினத்தன்று வேண்டும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நல்ல நம்பிக்கைகள் நிறைவேறட்டும் என்றே நாங்களும் வேண்டுகிறோம்.Trending Articles

Sponsored