தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்... கம்-பேக் கொடுக்கும் ரெய்னா!Sponsoredதென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை முடித்துள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 18-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சில மாதங்களாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கம்-பேக் கொடுத்துள்ளார். 

இந்திய அணி பட்டியல் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், சாஹல், குல்தீப், புவ்னேஷ்வர் குமார், பும்ரா, உனாட்கட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored