ஒரு நாள் போட்டிகளில் சொதப்பும் ஆஸ்திரேலியா... ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிபோகுமா?ஆஷஸ் தொடரில் 4 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைத் தவிடுபொடியாக்கியது ஆஸ்திரேலியா. ஆனால், அதன் பிறகு நடந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 - 1 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது அந்த அணி. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்படுமா என்ற ரீதியில் விவாதங்கள் கிளம்பியுள்ளன?

Sponsored


ஆஸ்திரேலிய அணிக்கு, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்மித்தான் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட்டில் கோலோச்சும் ஆஸ்திரேய அணி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சோபிக்க முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் ஸ்மித் தலைமையில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிவாகைச் சூடியுள்ளது. இதனால், ஸ்மித்திடமிருந்து ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

Sponsored


இது குறித்து பேசியுள்ள ஸ்மித், `ஆஸ்திரேலிய அணியை மிக மகிழ்ச்சியுடன் வழிநடத்தி வருகிறேன். துரதிர்ஷ்டவசமாக, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நான் விரும்பியதுபோல சரியாக விளையாட முடியவில்லை. அதனால், கேப்டன் பதவி குறித்த கேள்விகள் எழுகின்றன. இருப்பினும் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை' என்று பதிலளித்துள்ளார்.  
 

Sponsored
Trending Articles

Sponsored