சி.எஸ்.கே-வின் புதிய டீம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?! #VikatanSurvey #IPLAuctionSponsored11-வது ஐ.பி.எல் சீசனுக்கான ஏலம் முடிந்துவிட்டது. தோனி, ஜடேஜா, ரெய்னா ஆகியோரை தக்கவைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், டுவைன் பிராவோ, டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரை RTM கார்டு மூலம் தக்கவைத்துக்கொண்டது. அவர்கள் தவிர்த்து சென்னையின் முன்னாள் வீரர் முரளி விஜய் மட்டுமே அணிக்குத் திரும்பியுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின், ஆண்ட்ரூ டை, மோஹித் ஷர்மா போன்ற முன்னாள் வீரர்களை மீட்க முடியவில்லை.

வாட்சன், கேதர் ஜாதவ், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் எனப் பல அனுபவ வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருப்பதால், சென்னை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஏலத்தின் தொடக்கத்தில் சென்னை நிர்வாகம் பெரிதும் ஆர்வமில்லாமல் இருந்ததும், அவர்களை வருத்தத்துக்குள்ளாக்கியது. சி.எஸ்.கே-வின் கம்பேக் சீசனில், முன்பிருந்த ஆர்ப்பரிப்பு, ஏலத்துக்குப் பின் அடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை அணியின் செயல்பாடு உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். #VikatanSurvey  #IPLAuction

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored